Google search engine

கடையாலுமூடு: பாதை பிரச்சனை; பொதுமக்கள் சாலை மறியல்

கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட மருதம்பாறை பகுதியில் பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் பள்ளி மற்றும் பொது கிணறும் உள்ளன. தற்போது அந்தப் பகுதியில் வெளிநபர்கள் பட்டா பெற்று குடியிருந்து வருகின்றனர்.  புதிய வீடுகள் வந்தபோது பொது கிணற்றுக்கும், உட்பகுதியில் உள்ள 13 குடியிருப்புகளுக்கும் செல்ல மக்கள் முன்பு...

பளுகல்: வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

பளுகல் அருகே குட்டைக்கோடு பகுதி சேர்ந்தவர் சாந்தி (60) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜேனட் தங்கம். குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தலா 5.25 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என கூறி கடந்த 1965 ஆம் ஆண்டு அதே பகுதி...

கொல்லங்கோடு: வாகனம் மோதிய மூதாட்டி உயிரிழப்பு

நித்திரவிளையருகே கொல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ரோசம்மாள் (75). கடந்த மாதம் 29ஆம் தேதி மதியம் அந்தப் பகுதியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்குச் சென்று விட்டு, மஞ்சத்தோப்பு என்ற பகுதி வழியாக வீட்டிற்கு நடந்து செல்லும்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது...

கிள்ளியூர்: கடலோர தடுப்பு சுவர் அமைக்க எம்எல்ஏ கோரிக்கை

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாவிடம் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: - கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனயம் புத்தன்துறை ஊராட்சி பகுதியான இனயம் சின்னத்துறை மற்றும் ராமன்துறை மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் கடலில் போடப்பட்ட பெரிய பாறைக் கற்கள் கடலுக்குள்...

நாகர்கோவிலில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய...

இரணியல்: ரூ. 12 லட்சம் பறித்த வாலிபர் கைது

கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் பழைய நகைகளை மீட்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 11ஆம் தேதி இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 196 கிராம் தங்க நகைகள் ஒரு நகைக்கடையில் அடமானத்தில் உள்ளதாகவும், அதை திருப்பி விற்பனை செய்ய ரூ....

நாகர்கோவிலில் சாலையோர கடைகளில் திடீர் ஆய்வு செய்த மேயர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெட்டூர்ணிமடம் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர உணவு கடைகளை மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ. மகேஷ் நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வியாபாரிகளிடம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும்...

தேங்காபட்டணம்: திடீர் கடல் சீற்றம்; தடுப்பு சுவர் சேதம்

குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பகுதியில் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையை தொட்டு முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை, சின்னத்துறை, இனயம் ஆகிய கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன.  இந்த கடற்கரை கிராமங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடலில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடலலை வீடுகளுக்குள் புகுவதும்,...

குளச்சல்: ஆட்டோ டிரைவருக்கு எஸ்பி பாராட்டு

குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் நேற்று பீச்ரோடில் சவாரி சென்றுள்ளார். ஆட்டோவில் ஏறிய வாணியக்குடியை சேர்ந்த ஹெலன் என்பவர் இறங்கும் போது கையில் வைத்திருந்த 2.67 லட்சம் ரூபாய் பணத்தை...

அருமனை: பழமையான ஈட்டி மரம் வெட்டி கடத்தல்

அருமனை அருகே மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் தனியார் காட்டில் பழமையான ஈட்டி மரம் காணப்பட்டது. இந்த மரத்தை சம்பந்தப்பட்ட தனியார் நில உரிமையாளர் பராமரித்து வந்தார். மேலும் ஈட்டி மரம் பாதுகாக்கப்பட்ட மரம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 14) காட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்...