சவூதி அரேபியா வழி​யாக இந்​தி​யாவை நோக்கி வந்​து​கொண்​டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈ​ரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி​யாளர்​களின் அச்​சுறுத்​தல் காரண​மாக நடு​வழி​யிலேயே திரும்​பிச் சென்​றன. ஏமன் நாட்​டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள், காசா போருக்கு எதிர்ப்பு தெரி​வித்து செங்​கடல் மற்​றும் பாப்​-எல்​-மந்​தீப் ஜலசந்தி வழியே செல்​லும் சர்​வ​தேச வர்த்​தகக் கப்​பல்​கள் மீது தொடர் தாக்​குதல்​களை நடத்தி வரு​கின்​றனர். அமெரிக்கா மற்​றும் மேலை​ நாடு​களுக்​குச் சொந்​த​மான கப்பல்கள் மட்​டுமின்​றி, சவூதி அரேபி​யா​வின் முக்​கிய...
பிரிட்​டனின் 59-வது பிரதம​ராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று பதவி​யேற்​றார். இவர் கடந்த 10 ஆண்​டு​களில் பொறுப்பேற்கும் 7-வது பிரதமர் ஆவார். பிரிட்​டனில் கடந்த 2024-ல் நடை​பெற்ற நாடாளு​மன்​றத் தேர்​தலில் தொழிலா​ளர் கட்சி வெற்றி பெற்​றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்​மர் பிரதம​ராக பதவி​யேற்​றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவி​யேற்ற ஸ்டார்​மர் கடந்த 2 ஆண்டுகளாக பிரதம​ராக பதவி வகித்து வந்​தார். இந்​நிலை​யில் உள்​ளாட்சி தேர்​தலில் தொழிலா​ளர்...
ஈரானின் தெற்குப் பகுதியை அமெரிக்கா தாக்கிய நிலையில், குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ராணுவ கட்டளை மையங்கள், கடல்சார் கட்டமைப்புகள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும், தெற்கு ஈரானில் உள்ள ஷிராஸ், தெற்கு கடற்கரையில் உள்ள கொனார்க், சபஹார் பகுதிகளிலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன....
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் பதவியேற்ற பிறகு முதன்முறையாக வெள்ளை மாளிகைக்கு வருகை தந்திருந்தார். அவருடனான சந்திப்பில் பேசிய ட்ரம்ப், "நாங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் இருந்திருந்தால், இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது" என்று தெரிவித்தார். ஈரானின் ராணுவத் திறனைக்...
உக்​ரைன் கடல்​ பகு​தி​யில் வணிக கப்​பல் தாக்கப்பட்டு 4 இந்தியர்கள் உயி​ரிழந்த விவ​காரத்​தில் ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்​டனத்​தைப் பதிவு செய்​துள்ளது. ‘எம்​.​வி.கோல்​டன் லியோ’ என்ற வணி​கக் கப்​பல் 5 இந்​தி​யர்​கள் உட்பட மொத்​தம் 17 மாலுமிகளு​டன் சோளம் ஏற்​றிக் கொண்டு உக்​ரைனின் ஒடேசா துறை​முகத்​தில் இருந்து புறப்​பட்​டது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ரஷ்யா நடத்திய ஏவு​கணைத் தாக்​குதலில் இந்தக் கப்​பலில் இருந்த 4 இந்திய மாலுமிகள்...
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - உஷா பாலா சிலுகுரி தம்பதியருக்கு 4-வது குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளதாக ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அலெக் நீல் வான்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்ககெவே, இந்தத் தம்பதிக்கு ஈவான் (9 வயது), விவேக் (6 வயது) என்ற இரண்டு ஆண் குழந்தைகளும்,...
உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அது முதல் இதுநாள் வரையில் ஏவுகணைகள், ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது...
 ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதி​காலை​யில் மீண்டும் வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது. இடைக்​கால போர் நிறுத்த உடன்​பாட்டை மீறி ஹார்​முஸ் ஜலசந்தி​யில் எண்​ணெய்க் கப்​பல்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி​ய​தால், அந்​நாட்​டின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த ஒரு வார​மாக கடும் தாக்​குதலை மேற்​கொண்டு வரு​கிறது. ஈரானின் உள்​கட்​டமைப்​பு​களை குறி வைத்து இந்த தாக்​குதல் நடத்தப்படுகிறது. அமெரிக்​கா​வின் சமீபத்​திய தாக்​குதல்​களில் 50 பேர் கொல்​லப்​பட்​ட​தாக​வும் 517 பேர் காயம் அடைந்​த​தாக​வும் ஈரான்...
ஓமனில் வீட்​டு வேலை பார்க்​கும் இந்தியப் பெண்கள், சித்​திர​வதை, சுரண்​டல், சம்​பளம் வழங்​கப்​ப​டாதது போன்ற இன்னல்​களை எதிர்​கொள்​வ​தாக அவ்​வப்​போது புகார் எழுகிறது. இத்​தகைய இன்​னல்​கள் காரண​மாக பணியி​லிருந்து வெளியேறிய பெண் தொழிலா​ளர்​கள் மஸ்​கட் நகரில் இந்​திய தூதரக விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். ஹைத​ரா​பாத்தைச் சேர்ந்த ஷப்​னம் பேகம் சமீபத்​தில் இந்​திய தூதரகத்​தில் தஞ்​சம் அடைந்​தார். அவர் அளித்த புகாரில், ‘‘நல்ல சம்​பளம் தரு​வ​தாக கூறி தன்னை வீட்டு வேலைக்கு மஸ்​கட் அழைத்து...
பிரிட்​டனில் தொழிலா​ளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்​மர் பதவி​யில் இருந்​து ராஜி​னாமா செய்ய உள்​ள​தாக கடந்த மாதம் அறி​வித்​தார். இதைத் தொடர்ந்து பிரிட்​டனின் தொழிலாளர் கட்சித் தலை​வ​ராக கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆன்டி புர்ன்ஹாம் தேர்வு செய்யப்பட்டுள்​ளார். இதையடுத்து அவரே பிரதம​ராக பதவியேற்க​வுள்​ளார். அவர் வரும் திங்​கட்​கிழமை (ஜூலை 20) பதவி​யேற்​க​வுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. ஆன்டி புர்ன்​ஹாம் ஏற்​கெனவே கிரேட்​டர் மான்​செஸ்​டரின் மேய​ராக பணி​யாற்​றிய​வர் என்​பது குறிப்பிடத்தக்​கது. இதுகுறித்து ஆன்டி...