ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல்

0
25

 ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதி​காலை​யில் மீண்டும் வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது.

இடைக்​கால போர் நிறுத்த உடன்​பாட்டை மீறி ஹார்​முஸ் ஜலசந்தி​யில் எண்​ணெய்க் கப்​பல்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி​ய​தால், அந்​நாட்​டின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த ஒரு வார​மாக கடும் தாக்​குதலை மேற்​கொண்டு வரு​கிறது. ஈரானின் உள்​கட்​டமைப்​பு​களை குறி வைத்து இந்த தாக்​குதல் நடத்தப்படுகிறது.

அமெரிக்​கா​வின் சமீபத்​திய தாக்​குதல்​களில் 50 பேர் கொல்​லப்​பட்​ட​தாக​வும் 517 பேர் காயம் அடைந்​த​தாக​வும் ஈரான் அதி​காரி​கள் நேற்று முன்​தினம் தெரி​வித்​தனர். அமெரிக்க தாக்​குதலுக்கு பதிலடி​யாக வளை​குடா பிராந்​தி​யத்​தில் உள்ள அமெரிக்க கூட்​டாளி நாடு​கள் மீது ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

ஈரானின் ட்ரோன் ஒன்றை சனிக்​கிழமை தகர்க்​கும்​போது மற்​றொரு அமெரிக்க வீரர் இறந்​த​தாக அமெரிக்க ராணுவம் கூறியது. இதற்கு அடுத்த சில மணி நேரத்​தில் ஈரான் மீது அமெரிக்கா மீண்​டும் வான்​வழி தாக்​குதல் நடத்​தி​யது. தொடர்ந்து ஒன்​ப​தாவது இரவாக இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக அமெரிக்க ராணுவம் தெரி​வித்​தது.

இதற்கு பதிலடி​யாக அமெரிக்க கடற்​படை​யின் 5-வது படைப்​பிரிவு அமைந்​துள்ள பஹ்ரைன் மற்​றும் குவைத் நாடு​களை குறி​வைத்து ஈரான் தாக்​குதல் மேற்​கொண்​டது. இரு தரப்​பினரும் லட்​சக்​கணக்​கான மக்​கள் பயன்​படுத்​தும் சிவில் உள்​கட்​டமைப்​பு​களை இலக்கு வைத்து தாக்​குதல் நடத்தி வரும் வேளை​யில் பிரென்ட் கச்சா எண்​ணெய் ஒரு பேரல் விலை நேற்று 90 டாலருக்கு மேல் உயர்ந்​தது. இது போ​ரால் உரு​வான உலகளா​விய எரிசக்​தி நெருக்​கடியை மேலும்​ அதி​கரித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here