ஓமனில் இந்திய பெண்களுக்கு தேவையான உதவி வழங்கப்படும்: மஸ்கட்டில் இந்திய தூதர் உறுதி

0
26

ஓமனில் வீட்​டு வேலை பார்க்​கும் இந்தியப் பெண்கள், சித்​திர​வதை, சுரண்​டல், சம்​பளம் வழங்​கப்​ப​டாதது போன்ற இன்னல்​களை எதிர்​கொள்​வ​தாக அவ்​வப்​போது புகார் எழுகிறது.

இத்​தகைய இன்​னல்​கள் காரண​மாக பணியி​லிருந்து வெளியேறிய பெண் தொழிலா​ளர்​கள் மஸ்​கட் நகரில் இந்​திய தூதரக விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். ஹைத​ரா​பாத்தைச் சேர்ந்த ஷப்​னம் பேகம் சமீபத்​தில் இந்​திய தூதரகத்​தில் தஞ்​சம் அடைந்​தார்.

அவர் அளித்த புகாரில், ‘‘நல்ல சம்​பளம் தரு​வ​தாக கூறி தன்னை வீட்டு வேலைக்கு மஸ்​கட் அழைத்து வந்​த​தாக​வும் ஆனால் தினமும் 12 முதல் 15 மணி நேரம் பல வீடு​களில் சம்​பளம் இல்​லாமல் வேலை செய்ய வற்​புறுத்​தினர். மேலும் போதிய உணவு வழங்​காமல் தாக்​கினர். எனது செல்​போனை பறித்தனர்’’ என கூறியிருந்தார்.

இதுகுறித்து மஸ்​கட்​டில் உள்ள இந்​திய தூதரகம் ‘எக்​ஸ்’ தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள பதி​வில், “முதலா​ளி​களின் வீடு​களை விட்டு வெளி​யேறிய மற்​றும் முதலா​ளி​களால் கைவிடப்​பட்ட இந்தியப் பெண் தொழிலா​ளர்​களை இந்​திய தூதர் பிரஷாந்த் பிசே, தூதரக விடு​தி​யில் சந்​தித்​தார்.

அப்​போது அவர்​களின் புகார்களை கேட்​டறிந்​தார். தூதரகத்​தின் சமூக நலக் குழு​வின் மூலம் நடவடிக்கை எடுத்து பிரச்​சினை​களுக்கு விரை​வில் தீர்வு காணப்படும். தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்​தார்” என்​று தெரி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here