உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நின்றிருந்த சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் இருவரை தேடும் பணி நடைபெறுகிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து இருதரப்புக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது. சில நாட்களுக்கு முன், உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் நான்கு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு ரஷ்ய தூதரை நேரில் வர வழைத்து இந்தியா தனது பலத்த...
வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐ.டி.எஃப்) அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக விளங்கிய ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியது.
இதில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் பிரிவின் முக்கிய தளபதியான ஃபாரெஸ்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார்.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக மீண்டும் மோதலில் தீவிரம் காட்டின. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.
இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி...
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் எதிரொலி: நடுவழியில் திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்
admin - 0
சவூதி அரேபியா வழியாக இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நடுவழியிலேயே திரும்பிச் சென்றன.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடல் மற்றும் பாப்-எல்-மந்தீப் ஜலசந்தி வழியே செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் மட்டுமின்றி, சவூதி அரேபியாவின் முக்கிய...
ஈரான் போரில் சமரசம் செய்த நிலையில் அமெரிக்காவிடம் ரூ.96,000 கோடி நிதி உதவி கோரும் பாகிஸ்தான்
admin - 0
ஈரான் போரில் சமரசம் செய்த பாகிஸ்தான், அமெரிக்காவிடம் ரூ.96 ஆயிரம் கோடி நிதியுதவி கோரி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு அவ்வப்போது நிதியுதவி வழங்கி வருகிறது.
இந்த ஐஎம்எப் மீட்புத் திட்டம் அமலில் உள்ள போதிலும், அந்நாட்டில் பல தசாப்தங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. சீனா, சவுதி...
பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆசியான் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் 33-வது அமைச்சர்கள் கூட்டம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “உலகில் புவிசார் அரசியல் சிக்கல்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில், ஆசியான் பிராந்திய மன்ற அமைச்சர்கள் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம்...
உக்ரைனில் வணிக கப்பல் தாக்கப்பட்டு 4 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
admin - 0
உக்ரைன் கடல் பகுதியில் வணிக கப்பல் தாக்கப்பட்டு 4 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
‘எம்.வி.கோல்டன் லியோ’ என்ற வணிகக் கப்பல் 5 இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 மாலுமிகளுடன் சோளம் ஏற்றிக் கொண்டு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தக் கப்பலில் இருந்த 4 இந்திய மாலுமிகள்...
சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் டயனோக் என்ற நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41), செராசியா மிலன் ராம்னிக்பாய் (30) ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது கடை ஊழியர்கள் அசந்திருந்த நேரம் பார்த்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைர நகையை திருடி மங்க்ரோலியா தனது வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். மேலும் அதேபோன்ற போலி வைர நகையை கடையில் அவர்கள்...
பிரிட்டனில் முதல் முறையாக தனியாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அமைச்சராக இந்தியாவில் பிறந்த கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிஷ்கா நாராயணை நாட்டின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அமைச்சராக நியமித்துள்ளார். தனது அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள பரவலான மாற்றங்களின் ஒரு பகுதியாக, இப்பதவியை அவர்...
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின்...









