இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தியா என்று தெற்காசிய நாடுகளில் 2022-ல் தொடங்கி ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களின் போராட்டமும், அதன் மூலம் நிகழ்ந்த ஆட்சி, அரசியல் மாற்றங்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்துவிட்டன. இந்தப் பட்டியலில் அண்டை நாடான பாகிஸ்தான் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் ஜென்ஸீக்கள் அப்படியொரு போராட்டத்தை முன்னெடுக்க முடியாததன் பின்புலத்தைப் பார்ப்போம். அத்தனை காரணிகள் இருந்தும்... இத்தனைக்கும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய புரட்சி வெடிக்கத் தேவையான அளவு பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடை​பெற்று வரும் தேர்​தலைப் புறக்​கணிக்​கக் கோரி நடை​பெற்ற போராட்​டத்​தில் பாகிஸ்​தான் ராணுவம் 20 பேரை சுட்​டுக் கொன்றதால் பதற்​றம் நிலவுகிறது. பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் 53 தொகு​தி​களைக் கொண்ட சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டு, 3 கட்​டங்​களாக ஆகஸ்ட் 10-ம் தேதி வரை வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. ஜூலை 27 அன்று முதற்​கட்ட வாக்​குப்​ப​திவு தொடங்​கிய நிலை​யில், தேர்​தலை புறக்​கணிக்​கக் கோரி ‘ஜா​யிண்ட் அவாமி ஆக்​சன் கமிட்​டி’...
ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்​தில், நேற்று சக்​தி​வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​டது. கடலுக்கு அடி​யில் 10 கி.மீ ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கம் ரிக்​டர் அளவு​கோலில் 7.1 ஆக பதி​வானது. இதைத் தொடர்ந்​து, ஒரு மீட்​டர் (3.28 அடி) உயரம் வரை அலைகள் எழக்​கூடும் என ஜப்​பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்​தது. இந்த நிலநடுக்​கத்​தால் உயிர்ச்​சேதம் குறித்த தகவல்​கள் எது​வும் உடனடி​யாக...
வங்கதேச அதிபர் சஹாபுதீன் தனது பதவிக் காலம் முடிவ தற்கு முன்பே பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். வங்​கதேச அதிப​ராக கடந்த 2023-ம் ஆண்டு பதவி​யேற்​றவர் சஹாபுதீன்​(76). இவர் முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுடன் கூட்​ட​ணி​யில் இருந்​தவர். வங்​கதேசத்​தில் நீதிப​தி​யாக​வும் பணி​யாற்​றிய​வர். வங்​கதேசத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு அரசுக்கு எதி​ராக மாணவர்​கள் போராட்​டம் நடத்​தி​ய​தால் பிரதமர் ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். ஆனால் சஹாபுதீன் அதிபர் பதவி​யில் தொடர்ந்​தார். இப்​ப​த​வி​யில் சஹாபுதீன்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 25% வரிதிப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும், மாற்று சந்தைகளைத் தேடவும் பிரேசில் நடவடிக்கை எடுக்க உள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா சில திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, ஏற்றுமதியாளர்கள் புதிய சர்வதேச வாடிக்கையாளர்களைக் கண்டறிய தனது அரசு உதவும் என்று தெரிவித்துள்ளார். பிரேசில்...
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். சியாட்டில் சென்டரில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறையின் கைது நடவடிக்கை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து சியாட்டில் காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சியாட்டில் சென்டரில்...
ஈரானுடன் மறைமுகமாக நடைபெற்று வரும் தூதரகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அந்நாட்டின் மீது மீண்டும் மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ட்ரம்ப் பேசுகையில், "நாங்கள் ஈரானுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், மீண்டும் கடுமையான ராணுவ நடவடிக்கைக்குத் திரும்புவோம். ராஜதந்திர முயற்சிகளுக்கு அதிக நேரம் வழங்கப்படாது....
உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாசாவின் தீ கண்காணிப்புத் தரவுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிகஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் படங்களும் அப்கேக் வளாகத்திலிருந்து அடர்ந்த புகை மேகங்கள் எழும் காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதம்...
உலக அளவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட, கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஐ.நா. ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சரிவிகித உணவு’ குறித்த ஐ.நா. கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கையின்படி, உலக அளவில் 2025-ம் ஆண்டில் 64.50 கோடி மக்கள் இன்னும் பசியோடு வாழ்ந்துள்ளனர். ஆனால், 2024-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 1.40 கோடி குறைந்துள்ளது....
ரூ.200 மற்றும் ரூ.500 இந்திய கரன்சி நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது நேபாள ராஷ்டிர வங்கி. இந்த புதிய அறிவிப்பின்படி 2016, நவம்பர் 9 மற்றும் அதற்கு பிறகு வெளியான ரூ.200 மற்றும் ரூ.500 இந்திய கரன்சி நோட்டுகளை அந்நாட்டில் பயன்படுத்தலாம். இந்திய மதிப்பில் அதிகபட்சம் ரூ.25,000 வரையில் நேபாள மற்றும் இந்திய மக்கள் அந்த நாட்டுக்கு கொண்டு செல்லவும், கொண்டு வரவும் முடியும். இந்த...