ஈ​ரானில் பல இடங்​களை குறி​வைத்து அமெரிக்கா நேற்று முன்​தினம் இரவு மிகப் பெரிய தாக்​குதலை நடத்​தி​யது. இதில் ஈரானின் பல இடங்​களில் உள்ள ஏவு​கணை மற்​றும் டரோன் மையங்​கள், கண்​காணிப்பு மையங்​கள், ராணுவ தளங்​கள் அழிக்கப்​பட்​டன. ஈரான் மீது தொடர்ந்து 2 வாரங்​களாக தாக்​குதல் நடத்தி வந்த அமெரிக்​கா, ஆயுதக் கையிருப்பு குறைந்​த​தால் ஈரான் மீதான தாக்​குதலை நிறுத்தி வைத்​திருந்​தது. ஈரானுக்கு ஆதர​வாக ஈராக்கில் செயல்​படும் ஹவுதி தீவிர​வாத அமைப்​பு​கள்,...
 நேபாளத்​தின் கோஷி மாகாணம், சுன்​சரி மாவட்டம் இந்​திய எல்​லையை ஒட்​டி​ அமைந்​துள்​ளது. அங்கு இரு மதத்​தினரின் பண்​டிகை கொண்​டாட்​டங்​களின் போது திடீரென தகராறு ஏற்​பட்​டது. இது வன்​முறை​யாக மாறியது.நில​வரத்​தைக் கட்​டுப்​படுத்த காவல்​ துறை​யினர் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதில் ஒரு​வர் உயிரிழந்​தார். மேலும், பாது​காப்​புப் படை​யினர் உட்பட 10-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதைத் தொடர்ந்​து, கடந்த திங்​கள்​கிழமை அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. நேற்று 4-வது நாளாக இந்த ஊரடங்கு தொடர்ந்து அமலில்...
பாகிஸ்தானில் பதற்​றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்​தின் ஹங்கு மாவட்​டத்​தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து அங்கு கூடு​தல் போலீ​ஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். கூடு​தல் போலீ​ஸார் சென்ற வாக​னம் மீதும் தீவிரவாதிகள் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதற்கு பதிலடி கொடுக்​கும் நடவடிக்​கை​யில் போலீ​ஸார் நேற்று ஈடு​பட்​டனர். அப்போது தீவிர​வா​தி​களும் எதிர் தாக்​குதல் நடத்​தினர். இதுகுறித்து போலீஸ் செய்​தித் தொடர்​பாளர் நேற்று கூறுகை​யில், “ஹங்கு...
இந்​திய - பிரிட்​டானிய எழுத்​தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்​தானின் வேதங்​கள் என்ற நாவலை கடந்த 1988-ம் ஆண்டு வெளி​யிட்​டார். இது இஸ்​லாமியர்​களின் மத உணர்​வு​களைப் புண்​படுத்​து​வ​தாக புகார் எழுந்தது. இதனால் சல்​மான் ருஷ்டி உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​வில் நடை​பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்​றில் சல்​மான் ருஷ்டி தாக்​கப்​பட்​டார். அவரை ஹாதி மாதர் (28) என்​பவர் கத்​தி​யால் 15 முறை குத்​தி​னார். இதில் சல்​மான் ருஷ்டி தனது...
எல்​லைக் கண்​காணிப்​பு, பாது​காப்​பு, தளவாடங்​கள் மற்​றும் போக்​கு​வரத்தை பலப்​படுத்​து​வதற்​காக, திபெத்​தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்​திற்கு அரு​கில் ட்ரோன் ஆராய்ச்சி மற்​றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறு​வி​யுள்​ளது. சீனா இந்​திய எல்​லைக்கு அரு​கில் உள்ள பகு​தி​களில் ராணுவ பலத்தை அதி​கரித்து வரு​கிறது. லடாக்​கின் லே பகு​திக்கு அரு​கில் உள்ள ஹேட்​டன் விமானப்​படை தளத்​தில் ஏழு ஜே-20 ரக போர் விமானங்​களை நிறுத்​தி​யுள்​ளது. அருணாச்​சலப் பிரதேசத்​தின் தவாங் பகு​திக்கு அரு​கில் 4 ஜே-20...
 ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்​தில், செவ்வாய்க் கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​டது. இந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், தனது தலைமையில் அவசரகால பேரிடர் நிவாரணக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவு உள்ளது. இங்கு குமாமோட்டோ பகுதியில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது....
தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை புதன்கிழமை அன்று கூறியதாவது: ரஷ்யாவில் சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாதம் மற்றும் பல்வேறு நாசவேலைகளை திட்டமிடும் உக்ரைன் உளவுத்துறை, தீவிரவாத அமைப்புகள் திட்டமிடவும், அதை அரங்கேற்றவும் டெலிகிராம் தளத்தை பயன்படுத்துகிறது. அப்படி டெலிகிராமில் ஆக்டிவாக உள்ள சேனல்கள், சாட்களை அந்நிறுவனம்...
குறைந்த கட்​ட​ணத்​தில் சுற்​றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்​கள் தாய்​லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்​றுலா​வுக்கு சுமார் ரூ.2 லட்​சம் செலுத்தி உள்​ளனர். கடந்த 21-ம் தேதி சுவர்​ணபூமி விமான நிலை​யத்​துக்கு வந்த அவர்களை, சுற்​றுலா ஏற்​பாடு செய்​தவர்​கள் என்று கூறி டாக்ஸி மூலம் பட்​டா​யா​வுக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்​கிளில் பாங் லாமுங் மாவட்​டத்​துக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். அங்கு அவர்​களின் கை, கால்​களை கட்​டிப் போட்டு...
தொழில​திபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: இன்​னும் 10 ஆண்​டு​களில் மனிதர்​கள் ஏஐ-யிடம் தங்​கள் கட்​டுப்​பாட்டை இழப்​பார்​கள். 2036-ம் ஆண்​டுக்​குள் உலகம் ரோபோக்​கள் வசம் செல்​லும். ஏஐ மனிதகுலத்​தையே அழிப்​ப​தற்கு 10 முதல் 20% வாய்ப்​பு​கள் உள்​ளன. அதி​கார அமைப்​பில் விரை​வில் மாற்​றம் ஏற்​படும். அடுத்த 5 ஆண்டு​களில் ஒட்​டுமொத்த மனிதகுலத்​தின் அறிவை​யும் ஏஐ விஞ்​சி​விடும். ஒரு விஷ​யத்தை மனிதர்​களை விட...
ஜப்பானின் தெற்குப் பகுதியான குமாமோட்டா மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த வணிக வளாகத்தில் பலர் சிக்கிக்கொண்ட நிலையில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. குமாமோட்டோ மாகாணத்தில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கும் மத்திய கியூஷு தீவின் மிகப் பெரிய நகரமான குமாமோட்டோவுக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக ஜப்பான் வானிலை...