Google search engine
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதன் விவரங்கள் குறித்து ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ரஷ்யா தற்போது 4,380 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,708 அணு ஆயுதங்கள் உள்ளன. உலக நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்களில் 90 சதவீதம் இந்த இரு...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் இந்தியாவில் தயாரான ஆயுதங்கள், தளவாடங்கள் இடம்பெற்று பார்வையாளர்களைக் கவர்ந்தன. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யூரோசாட்டரி 2024 என்ற பெயரில் ராணுவக் கண்காட்சி கடந்த 17-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றன. டிஆர்டிஓ சார்பில் பினாக்கா மல்ட்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டம், எல்சிஏ...
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர். இந்தியாவுக்கு எதிராக பன்னுன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததையடுத்து அவரை இந்தியா தீவிரவாதியாக அறிவித்தது. இந்த நிலையில், பன்னுனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் இந்தியரான நிகில் குப்தா (52 வயது) ஈடுபட்டதாக அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டிஉள்ளது. இந்த...
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்துவதற்காக, 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா - பிரான்ஸ் அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடமிருந்து ஏற்கெனவே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிக் 29 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு...
பாக்தாத்: ஈராக்கின் வடக்கில் எர்பில் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்தமக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 293 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின்பிரதமராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இதற்காக, மோடிக்கு பாகிஸ்தான்...
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் மாயமாகியுள்ளது. அவருடன் மேலும் 9 பேர் விமானத்தில் பயணித்தனர். தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. இந்த விமானம் திங்கள்கிழமை (ஜூன் 10) அன்று 51 வயதான துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாவுடன் தலைநகர் லிலொங்வேயில் இருந்து புறப்பட்டது. அந்த விமானம் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள...
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம், ஓபன் ஏஐ, நியூரோலிங்க், தி போரிங் நிறுவனங்களிலும் இந்தியவம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எலனுக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் டெஸ்லா சார்பில் ஓட்டுநர் இல்லாத கார் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார்செயற்கை நுண்ணறிவு...
இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஜூன் 6) இரவு 11 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தார் சுனிதா வில்லியம்ஸ். அவர் புதன்கிழமை அன்று போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்ணுக்கு புறப்பட்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்துடன் அவர் கொண்டாடினார். துள்ளல் நடனத்துடன் அவர் உள்ளே நுழைய சக விண்வெளி வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனை போயிங் ஸ்பேஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவருடன்...
இரண்டாம் உலகப் போரின் D-Day 80-வது நிறைவு ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற 102 வயதான கடற்படை வீரரான ராபர்ட், நியூயார்கில் இருந்து பிரான்ஸ் நாட்டின் நார்மாண்டிக்கு பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்தார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி படைகளின் வசம் இருந்த பிரான்ஸ் நாட்டின் பகுதியை மீட்கும் வகையில் நேச நாட்டு படைகள் நார்மாண்டியில் 1944, ஜூன் 6-ம் தேதி அன்று படைகளை இறக்கி இருந்தன. இது...