ரஷ்யாவின் மத்​தி​யப் பகு​தி​யான தாதர்​ஸ்​தான் பிராந்​தி​யத்​தின் மீது உக்ரைன் நடத்​திய ட்ரோன் தாக்​குதலில் குழந்தை உள்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். உக்​ரைன் எல்​லை​யி​லிருந்து சுமார் 1,000 கிலோமீட்​டர் தொலைவில் அமைந்​துள்ள நிஷ்னெ​காம்​ஸ்க் என்ற தொழில் நகரத்​தில் உள்ள எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யத்​தைக் குறி​வைத்து உக்​ரைன் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது. இதில், குழந்தை உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், காயமடைந்த 75 பேரில் 21 பேர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள​தாக தாதர்​ஸ்​தான்...
கொலம்​பி​யா​வில் நேற்று சக்​தி​வாய்ந்த பூகம்​பம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொலம்​பி​யா​வின் சோகோ மாகாணம், சான் ஹோசே டெல் பால்மர் நகரை மைய​மாகக் கொண்டு நேற்று சக்​தி​வாய்ந்த பூகம்பம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அலகில் 7.4 ஆகப் பதி​வானது. இந்த பூகம்​பகத்​தால் சான் ஹோசே டெல் பால்​மர், கலி, பெரே​ரா, மனி​சாலெஸ் உள்​ளிட்ட நகரங்​களில் ஏராள​மான...
பாகிஸ்​தானின் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள ஒரு மசூ​தி​யில் லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பின் மூத்த கமாண்​டர் மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்​தார். பாகிஸ்​தானிலிருந்து செயல்​படும் லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பின் மூத்த கமாண்​டர் காரி சயீத் அப்​துல் அஜீஸ். ஜம்​மு-​காஷ்மீரில் என்​க​வுண்​டர்​களில் கொல்​லப்​பட்ட தீவிர​வா​தி​களின் குடும்​பங்​களுக்கு உதவி வழங்​கும் லஷ்கர் அமைப்​பின் துறைக்கு காரி சயீத் பொறுப்​பாள​ராக இருந்​தார். இவர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள குபா மசூ​திக்கு தொழுகைக்​காக சென்​றுள்​ளார். இந்​நிலை​யில், அவர் மசூ​தி​யின் நுழை​வாயி​லில் திடீரென சரிந்து...
பாகிஸ்​தான் முழு​வதும் கோது​மைக்கு கடும் தட்டுப்​பாடு ஏற்​பட்டு இருக்​கிறது. கடந்த மார்ச் மாதம் பாகிஸ்​தானில் 20 கிலோ கோதுமை மாவு பாக்​கெட் ரூ.1,800-க்கு (இந்​திய ரூபா​யில் 616.71) விற்​பனை செய்​யப்​பட்​டது. தற்​போது இதே அளவு கோதுமை மாவு ரூ.3,200-க்கு (இந்​திய ரூபா​யில் 1,096.38) விற்​பனை செய்​யப்​படு​கிறது. சமையல் எண்​ணெய், மளிகை பொருட்​களும் கணிச​மாக விலை உயர்ந்​துள்​ளன. ஒரு வாரத்​தில் மட்​டும் உணவு பொருட்​களின் விலை 10% வரை உயர்ந்​திருக்​கிறது. இதே​போல பாகிஸ்​தானில் பெட்​ரோல்,...
ரஷ்யா மீது பொருளா​தா​ரத் தடை விதிக்​கும் மசோதா அமெரிக்க செனட் சபை​யில் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​யும் நாடு​களுக்கு 100 சதவீத வரி விதிக்க அதி​காரம் அளிக்​கும் புதிய தடைகள் மசோ​தாவுக்கு அமெரிக்க செனட் சபை நேற்று முன்​தினம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்த மசோ​தாவுக்கு லிண்ட்சே ஓ.கிரஹாம் ரஷ்யா மற்​றும் ஈரான் தடைகள் சட்​டம் 2026 என்று பெயரிடப்​பட்​டுள்​ளது....
ரஷ்ய செய்தி நிறு​வன​மான ‘டாஸ்​’-க்கு ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்​னுலின் கூறி​யிருப்​ப​தாவது: ஹார்​முஸ் மற்​றும் பாஸ்​பரஸ் ஜலசந்​திப் பகு​தி​களில் அதி​கரித்து வரும் ஆபத்துகளை எதிர்​கொள்ள மாற்​றுப் போக்​கு​வரத்து வழித்தடங்கள் அவசி​ய​மாகின்​றன. இதற்​காகத் துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்தான் வழி​யாக இந்​தி​யப் பெருங்​கடலை அடை​யும் வகையில் ரயில் பாதையை அமைப்​பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்​டும். இந்தியா​வுக்கு நேரடி​யாகப் போக்​கு​வரத்து வசதியை ஏற்​படுத்​தும் எந்​தவொரு திட்​ட​மும் ஏற்​கத்​தக்​கதே. இத்​திட்​டம்...
கனடாவில் இந்​திய வம்​சாவளிப் பெண்​ணைக் கொலை செய்​து​விட்டு 7 மாதங்​களாகத் தலைமறை​வாக இருந்த அவரது காதலனை, சர்​வ​தேச காவல் அமைப்​பு​களின் உதவி​யுடன் டொராண்டோ காவல் துறை​யினர் விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர். கனடா​வின் டொராண்​டோ​வில் வசித்து வந்த 30 வயதான இமான்ஷி குரானா என்ற இந்​தி​யப் பெண், கடந்த 2025 டிசம்​பர் 19 இரவில் திடீரென மாய​மானதைத் தொடர்ந்​து, காவல் துறை அவரைத் தீவிர​மாகத் தேடத் தொடங்​கியது.மறு​நாள் காலை அப்​பகு​தி​யில்...
பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடு​கள் இடையே நேற்று முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்தானது. இதன்​படி ஒரு நாட்​டின் மீது தாக்​குதல் நடத்தப்பட்​டால் 3 நாடு​கள் மீதான தாக்​குதலாக கருதப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த 2025-ம் ஆண்டு செப்​டம்​பரில் பாகிஸ்​தான், சவுதி அரேபியா இடையே பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி எதிரி நாடு​களால் சவுதி அரேபி​யா​வுக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டால் பாகிஸ்​தானின் அணு ஆயுதங்​களை பயன்​படுத்த ஒப்பந்​தத்​தில் வழி​வகை செய்​யப்​பட்டு...
ஈரான் உச்ச தலை​வர் மொஜ்தபா காமேனி​யுடன் மோதல் இல்லை என்று அந்த நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரி​வித்​துள்​ளார். கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் ராணுவம் இணைந்து நடத்​திய வான்​வழி தாக்​குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்​துல்லா அலி காமேனி கொல்​லப்​பட்​டார். இதைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ் தபா காமேனி புதிய உச்ச தலை​வராக பதவி​யேற்​றார். கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தாக்​குதலில் மொஜ்த​பா​வும் படு​கா​யம் அடைந்​தார்....
பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்​கக்​கோரி, நாடு முழு​வதும் போராட்​டத்​தில் ஈடு​பட்ட 100-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர். பாகிஸ்தான் முன்​னாள் பிரதமர் இம்ரான் கான், பல்​வேறு வழக்​கு​களில் கடந்த 2023, ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார். சிறை​யில் அடைக்​கப்​பட்டு 3 ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், அவரை விடுவிக்​கக்​கோரி, நாடு முழு​வதும் போராட்​டத்​தில் ஈடு​பட்ட அவரது பாகிஸ்​தான் தெஹ்ரீக்​-இ-இன்​சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதர​வாளர்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்யப்பட்டனர். பிடிஐ...