Google search engine
மகளிருக்கான எஃப்ஐஹெச் புரோ ஹாக் லீக்கில் நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் பல்ஜீத் கவுர் (19-வது நிமிடம்), சாக்சி ராணா (38-வது நிமிடம்), ருதுஜா ததாசோ பிசால் (45-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். ஸ்பெயின் அணி சார்பில் சோபியா ரோகோஸ்கி (21-வது நிமிடம்), எஸ்டெல்...
பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம் ஆண்டு சீசனில் எம்ஆர்எஃப் அணி இணைந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து டயர்களையும் விநியோகம் செய்யும் உரிமையையும் எம்ஆர்எஃப் பெற்றுள்ளது. ஐரோப்பிய ராலி சாம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்திய எம்ஆர்எஃப் டயர்ஸ் அணி தற்போது இங்கிலாந்தில் தங்களது திறனை வெளிப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் எம்ஆர்எஃப் அணியின் சவாலை ஓட்டுநர்கள் ஜேம்ஸ் வில்லியம்ஸ், மேக்ஸ் மெக்ரே ஆகியோர் வழிநடத்த உள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’...
அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆர்எஸ்பி சென்னை 25-20, 25-23, 25-20 என்ற செட் கணக்கில் பாண்டிச்சேரியையும், மத்திய தலைமைச் செயலக அணி 16-25, 25-17, 19-25, 25-20 16-14, என்ற செட் கணக்கில் ஆர்எஸ்பி கொச்சி அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு...
23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் 30 அணிகளைச் சேர்ந்த 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 155 நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். இந்த போட்டியில் முன்னணி நட்சத்திரங்களான சுமித் ஆன்டில் (ஈட்டி எறிதல்), மனோஜ் சபாபதி...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருதி இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. லீக்...
 2025-ல் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. ஐபிஎல் சீசன் தொடருக்கான முழு அட்டவணை நேற்று ஐபிஎல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள...
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜிப் உர் ரஹ்மான் இணைந்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 5 முறை பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. இறுதி போட்டிக்கு வந்த 5 முறையும் அந்த அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22-ல் தொடங்கவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா...
கிரிக்கெட் என்பது வரவு - செலவு பார்க்கும் இடமல்ல என, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறினார். மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க 65-வது ஆண்டு விழா கருப்பாயூரணியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருதுபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்று லீக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசியதாவது:- “கிரிக்கெட் ஆடினால்...
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்தின் இகா ஸ்வியா டெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். தோகாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3 முறை சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் ஸ்வியாடெக்,...