சந்​தோஷ் டிராபி கால்பந்து போட்​டி​யின் கால் இறு​திச் சுற்​றில் விளை​யாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்​ளது. அசாம் மாநிலம் டகு​கானா மற்​றும் சிலப்பதரில் சந்​தோஷ் டிராபி கால்​பந்து தொடரின் இறுதிக்கட்ட சுற்று நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு அணி நேற்று உத்​த​ராகண்ட் அணி​யுடன் சிலப்​ப​தர் கால்​பந்து மைதானத்​தில் மோதி​யது. இதில் தமிழ்​நாடு அணி 1-0 என்ற கோல் கணக்​கில் உத்​த​ராகண்ட் அணியை வீழ்த்தி கால்...
இந்​தி​யா, நியூஸிலாந்து அணி​கள் மோதும் 5-வது மற்​றும் கடைசி சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி திரு​வனந்​த​புரத்​தில் இன்று நடை​பெறவுள்​ளது. திரு​வனந்​த​புரத்​தி​லுள்ள கிரீன்​பீல்ட் சர்​வ​தேச மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு இப்​போட்டி நடைபெறவுள்ளது. 5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்ளது. தொடர்ச்​சி​யாக 3 போட்​டிகளில் வெற்றி பெற்​றிருந்த இந்திய அணி, விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற 4-வது போட்​டி​யில் நியூஸிலாந்​திடம் தோல்வி கண்​டது....
 இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் விராட் கோலியின் இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளப் பக்​கம் முடக்​கப்​பட்ட நிலை​யில், அது மீண்​டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்​பட்​டது. இந்​திய கிரிக்​கெட் அணி​யின் நட்​சத்​திர வீர​ராக இருப்​பவர் விராட் கோலி. தற்​போது அவர், சர்​வ​தேச ஒரு நாள் போட்​டி​யில் மட்​டும் விளை​யாடி வரு​கிறார். விராட் கோலிக்கு கோடிக்​கணக்​கான ரசிகர்​கள் உள்​ளனர். அவரது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்தை 27.4 கோடி ரசிகர்​கள் பின் தொடர்கின்றனர். இந்​நிலை​யில் விராட் கோலி​யின் இன்​ஸ்​டாகி​ராம்...
ஆஸ்​திரேலிய ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்னிஸ் போட்​டி​யின் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திச் சுற்​றுக்கு ஸ்பெ​யின் வீரர் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பிய வீரர் ஜோகோ​விச் ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர். அரை இறுதி ஆட்​டத்​தில் ஐந்​தரை மணி நேர போராட்​டத்​துக்​குப் பின்​னர் அல்​க​ராஸ் வெற்றி கண்​டார். ஆண்​டின் முதல் கிராண்ட்​ஸ்​லாம் போட்​டி​யான ஆஸ்திரேலிய ஓபன் டென்​னிஸ் போட்டி மெல்​பர்​னில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற முதலா​வது அரை இறு​திப் போட்​டி​யில் முதல் நிலை வீர​ரான...
ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் விளை​யாட முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலென்கா​வும், 5-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா​வும் தகுதி பெற்​றுள்​ளனர். ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்​னிஸ் தொட​ரான ஆஸ்​திரேலிய ஓபன் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வருகிறது. இதன் 12-வது நாளான நேற்று மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறுதி ஆட்​டத்​தில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின்...
நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 50 ரன்​கள் வித்தியாசத்​தில் தோல்வி அடைந்​தது. 216 ரன்​கள் இலக்கை துரத்திய இந்​திய அணி 18.4 ஓவர்​களில் 165 ரன்களுக்கு ஆட்ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஷிவம் துபே 23 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் விளாசி​னார். ரிங்கு சிங் 30 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 39...
டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் பங்கேற்​ப​தற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி பிப்​ர​வரி 2-ம் தேதி அதி​காலை இலங்​கைக்கு புறப்பட உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. மேலும் உலகக் கோப்பை தொடரையோ அல்​லது இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்டத்தையோ பாகிஸ்​தான் அணி புறக்​கணிப்​ப​தற்கு வாய்ப்பு இல்லை எனவும் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரியத்துக்கு நெருக்​க​மான வட்​டாரங்​கள் தெரிவித்துள்ளன. ஐசிசி டி 20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ர​வரி 7-ம் தேதி...
டெல்லி​யில் குடும்​பத்​தினர் முன்னிலை​யில் விளை​யாடு​வது சிறப்​பான விஷ​யம் என்று நெதர்​லாந்து கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்​றுள்ள இந்திய வம்​சாவளி வீரர் ஆர்​யன் தத் கருத்து தெரிவித்துள்ளார். இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவர் ஆர்​யன் தத். இவர் தற்​போது நெதர்​லாந்து கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்று விளை​யாடி வரு​கிறார். வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி தொடங்​க​வுள்​ளது. போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக நெதர்​லாந்து அணி​யினருடன்...
சென்னை மாவட்ட வில்வித்தை பயிற்சி மையத்துக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு, பிப்.8-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாg அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்ட நிதியுதவியுடன் வில்வித்தை பயிற்சிக்கான மையம் சென்னையில் அமைய உள்ளது. இந்த மையத்தில் தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சிகள் வழங்கப்பட...
தாய்​லாந்து மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் பாங்​காக் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​ வின் கிரண் ஜார்ஜ் 21-15, 21-9 என்ற நேர் செட் கணக்​கில் மலேசி​யா​வின் ஷோலே ஐடிலை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். மற்ற இந்​திய வீரர்​களான மஞ்​சு​நாத் 21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்​கில் டென்​மார்க்​கின் மேக்​னஸ் ஜோஹன்​சனை​யும், தருண் மன்​னேபள்ளி 22-20, 21-17 என்ற செட்...