துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது. 9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இந்திய...
ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை 31 ரன்களில் வீழ்த்தி உள்ளது பாகிஸ்தான் அணி. 9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று (வியாழக்கிழமை) விளையாடியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி...
 ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத்...
கான்பூர்: மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முடிவை பெற வேண்டும் என்பதற்காக 100 ரன்களுக்கு கூட ஆட்டமிழக்க தயாராக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக இந்திய அணி சுமார் 230 ஓவர்களை இழந்தது. இதில் முழுமையாக இரு நாட்கள் ஆட்டம் கைவிடப்பட்டதும்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண வேண்டியுள்ளது. தனது முடிவை செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார் பாபர் அஸம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அந்த அணியின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் இந்த நிலை...
மக்காவு பாட்மிண்டன் தொடரில்இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய் - லோன் ஜிஹ் யுன் ஜோடியை வீழ்த்தியது அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில்...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. காலே நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. பதும் நிசங்கா 1 ரன்னில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் சந்திமால், திமுத் கருணரத்னேவுடன் இணைந்து...
மக்காவு ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சகநாட்டைச் சேர்ந்த ஆயுஷ் ஷெட்டியுடன் மோதினார். இதில் கிடாம்பி காந்த் 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.கால் இறுதி சுற்றில் ஹாங்காங்கின் லாங் அங்கஸுடன்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் இரு ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 68 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.தொடர்ந்து செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்தது. இந்நிலையில்...
கவரைப்பேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு வாலிபால் இறுதிப் போட்டியில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி - ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் ஆர்எம்டி கல்லூரி அணி 15-25, 25-16, 25-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோன்று மகளிருக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி...