95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து ஐஓசி, ஒடிசா ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.இந்நிலையில் நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஐஓசி-போபால் அணிகள்...
95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐஓசி - ஒடிசா அணிகள் மோதின. இதில் ஐஓசி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சுமித் குமார் (18-வது நிமிடம்), ரகுநாத் (28-வது நிமிடம்), குஜிந்தர் சிங் (42-வது நிமிடம்)...
அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 பாட்மிண்டன் தொடர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் கவரபேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் வேல் மல்டி டெக் கல்லூரியை வீழ்த்தியது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆர்எம்கே கல்லூரி 18-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. அடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஆர்எம்கே கல்லூரி...
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர்அணியும், மகளிர் அணியும் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தன. இதில் ஆடவர் அணியில் இடம் பெற்றிருந்த ஆர்.பிரக்ஞானந்தா, மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த அவரது சகோதரி ஆர்.வைஷாலி மற்றும் இந்திய அணியின் கேப்டன் நாத்...
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் பிரிவில் 10 சுற்றுகளின் முடிவில் இந்தியா 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் கடைசி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, சுலோவேனியாவுடன் மோதியது. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் டி. குகேஷ், விளாடிமிர் ஃபெடோசெவை 48-வது காய் நகர்த்தலின் போது வீழ்த்தினார். தொடர்ந்து இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, ஆன்டன் டெம்சென்கோவுடன்...
சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: வலுவான பந்துவீச்சு கொண்ட அணியை உருவாக்க விரும்புகிறோம், நிலைமைகள் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள நாங்கள்தயாராக இருக்க வேண்டும். நிலைமைகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் இந்தியாவில் விளையாடினாலும், வெளிநாட்டில் விளையாடினாலும், அதற்கு தகுந்தவாறு அணியை உருவாக்க விரும்புகிறோம். வங்கதேச அணிக்கு எதிரான...
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. ஆட்ட நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வானார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் விளாசிய 113 ரன்கள், ரவீந்திர ஜடேஜா சேர்த்த 86 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 376 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதேவேளையில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு...
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி...
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் அபாரமாக பந்து வீசினார். அவர், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா (6), ஷுப்மன் கில் (0), விராட் கோலி (6), ரிஷப் பந்த் (39) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். 24 வயதான ஹசன் மஹ்முத், தனது 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.சேப்பாக்கம்...
சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 112 பந்துகளில், 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 91.07 ஆகும். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் ஜடேஜாவுடன் இணைந்து தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு இந்திய அணியை சரிவில் இருந்து வலுவான நிலைக்கு கொண்டு வந்தார். முதல் நாள்...