அவசரமாக தாயகம் திரும்பினார் கவுதம் கம்பீர்

0
212

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகலிரவாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் ‘அவசர சூழ்நிலை’ காரணமாக நேற்று (26-ம் தேதி) அதிகாலை பெர்த் நகரில் இருந்து விமானம் மூலம் தாயகம் புறப்பட்டார். இதனால் அவர், வரும் 30-ம் தேதி கான்பெர்ராவில் தொடங்கும் 2 நாட்கள் கொண்ட பிங்க் பந்து பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியினருடன் இருக்க மாட்டார்.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “கவுதம் கம்பீர் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு புறப்பட்டார். இது தவிர்க்க முடியாத தனிப்பட்ட அவசரநிலையாகும். 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அவர், அடிலெய்டுக்கு திரும்புவார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here