டிசம்பர் 29-ல் புரோ கபடி இறுதிப் போட்டி

0
36

புரோ கபடி லீக் 11-வது சீசனின் 2-வது கட்ட போட்டிகள் தற்போது நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதன்படி இறுதிப்போட்டி வரும் டிசம்பர் 29-ம் தேதி புனேவில் உள்ள பாலேவாடி விளையாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது.

முன்னதாக டிசம்பர் 26-ம் தேதி பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ம் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்களும் புனேவிலேயே நடத்தப்படுகிறது.

லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அதேவேளையில் 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் பலப்பழீட்சை நடத்தும். இதில் இருந்து இரு அணிகள் அரை இறுதி சுற்றில் நுழையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here