Google search engine
முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: யுஜிசி நெட் தேர்வு ரத்தானதை தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டிருப்பது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணி...
கோவை விமான நிலையத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை அவிநாசி சாலையில் 'சிட்ரா' பகுதி அருகே அமைந்துள்ளது கோவை சர்வதேச விமான நிலையம். இங்கு உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில்...
கூடுவாஞ்சேரி, நந்திவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாகத் தினமும் பல மணி நேரம் பகல் இரவு பாராமல் மின்வெட்டு ஏற்படுவதால் மின் வாரியத்தின் மீது விரக்தியடைந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் நள்ளிரவு கூடுவாஞ்சேரியில் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, நந்திவரம், கன்னிவாக்கம், சாந்தாதேவி நகர், தர்காஸ், பெருமாட்டுநல்லூர் உட்பட்ட பல்வேறு நகர்ப் பகுதிகளில் நேற்று இரவு 10:30 மணிக்கு...
சட்டப்பேரவையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அறிவிப்புகளை அத்துறைகளின் அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,000 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதியதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். பட்டாசு தொழிற்சாலை களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி ரூ.24.90 லட்சத்தில்...
50-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி சாராயத்தின் தன்மை குறித்து மருத்துவர்களிடையே விசாரித்தபோது, “அரசு அனுமதியின்றி பல்வேறு மூலப்பொருட்களை பயன்படுத்தி காய்ச்சி, வடிகட்டி குடித்தால் அது கள்ளச் சாராயம். அதில் போதைக்காக மெத்தனால் கலந்தால் விஷச் சாராயமாகி விடுகிறது. இது தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை...
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பச்சமலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள நெசக்குளம் கிரமத்தில் இருந்த 250 லிட்டர் கள்ளச் சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து...
சட்டப்பேரவைக்கூட்டத்தொடரில் நாளை மறுநாள் (24ம் தேதி) நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்க இருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு கடந்த ஜனவரி முதல் ரூ.2500 உயர்வு அளித்து தற்போது ரூ.12,500 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இத்தொகை 10,000, ரூ.2500 என...
“சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மொத்தமுள்ள 66 ஏக்கர் பரப்பளவிலும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் புறநகர்...
கள்ளச் சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் இனியவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னை பெருங்குடியில் கடந்த 17-ம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா...