திருச்சி பச்சமலையில் சாராய ஊறல் அழிப்பு: ஆட்சியர், எஸ்.பி. முன் ஊர் மக்கள் உறுதி ஏற்பு

0
64

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பச்சமலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்குள்ள நெசக்குளம் கிரமத்தில் இருந்த 250 லிட்டர் கள்ளச் சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச் சாராயத்தின் தீமைகளை எடுத்துக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச் சாராய உற்பத்தி நடக்காது அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.