இன்று இல்லை என்றால், நாளை வெல்வோம்: வைரலாகும் சீமான் ஆடியோ பேச்சு

0
24

‘இன்று இல்லை என்​றால், நாளை வெல்​வோம்’ என கட்​சி​யினருடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசிய ஆடியோ சமூக வலை​தளங்​களில் பரவி வைரலாகி வரு​கிறது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் தனித்து போட்​டி​யிட்ட நாம் தமிழர் கட்சி போட்​டி​யிட்ட அனைத்து தொகு​தி​களி​லும் டெபாசிட் இழந்​தது.

இந்​நிலை​யில் தேர்​தலில் படு​தோல்​வியடைந்​ததை அடுத்​து, கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், கட்​சி​யினருக்கு ஆறு​தல் தெரி​வித்த ஆடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி அதி​கள​வில் பகிரப்​பட்டு வரு​கிறது.

அந்த ஆடியோ பதி​வில் சீமான் கூறி​யிருப்​ப​தாவது: நான் நலமாக இருக்​கிறேன். நீங்​கள் கவலைப்​ப​டாதீர்​கள். இன்​றைக்கு இல்லை என்​றால், நாளை வெல்​வோம்.

அடுத்த 5 ஆண்​டு​கள் இருக்​கிறது. களத்​தில் நின்று வேலை பாருங்​கள். மக்​களோடு மக்​களாக நில்​லுங்​கள். களத்​தில் இருந்து வெளி​யேற வேண்​டாம். திரைக்​கவர்ச்​சியை நம்பி மக்​கள் ஏமாந்து விட்​டார்​கள்.

அவரை (விஜய்) ஆட்​சி​யில் உட்​கார வைக்க வேண்​டும் என்று நினைத்​தார்​கள். தற்​போது அவரது ஆட்​சி​யில் வாழ்ந்து பார்ப்​பார்​கள் தானே. எனவே, அடுத்து நமக்​குத் தான் வாய்ப்​பு. தைரிய​மாக இருங்​கள். இவ்​வாறு அதில்​ பேசி​யுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here