தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமனம்

0
20

தமிழகத்​தில் 13 ஐபிஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். முதல்​வரின் பாது​காப்பு பிரிவு டிஐஜி​யாக தர்​ம​ராஜன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதி​காரி​கள் நிலை​யில் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. இதன் தொடர்ச்​சி​யாக ஐபிஎஸ் அதி​காரி​கள் நிலை​யிலும் மாற்​றங்​கள் நடந்து வரு​கின்​றன. முதல் கட்​ட​மாக, உளவுத்​துறை ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் நேற்று முன்​தினம் நியமிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் மேலும் 10 ஐபிஎஸ் அதி​காரி​களை பணி​யிட மாற்​றம் செய்து உள்​துறைச் செயலர் மணி​வாசன் நேற்று உத்​தர​விட்​டுள்​ளார். அதன்​படி, உளவுத் துறை டிஜிபி​யாக இருந்த பால நாகதே​வி, சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். இதையடுத்​து, உளவுத் துறை தலைமை அதி​காரி​யாக அஸ்ரா கார்க் செயல்பட உள்​ளார்.

மேலும், முதல்​வர் விஜய்​யின் பாது​காப்பு பிரிவு டிஐஜி​யாக ஜி.தர்​ம​ராஜன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இவர் முன்​ன​தாக, வேலூர் சரக டிஐஜி​யாக பணி​யாற்​றி​னார். இதே​போல, தென் சென்னை காவல் இணை ஆணை​யர் பாகெர்லா சிபாஸ் கல்​யாண் உளவுத் துறை (உள்​நாட்டு பாது​காப்​பு) டிஐஜி​யாக​வும், திருநெல்​வேலி சரக டிஐஜி சரவணன், உளவுத் துறை (சிஐடி) டிஐஜி​யாக​வும், திரு​வாரூர் மாவட்ட எஸ்​.பி. கருண் உத்​தவ் ராவ், ஒருங்​கிணைந்த குற்ற உளவுப் பிரிவு எஸ்​.பி.​யாக​வும், தென்​காசி மாவட்ட எஸ்​.பி. மயில்​வாக​னன், எஸ்​பிசிஐடி (1) எஸ்​.பி.​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தூத்​துக்​குடி எஸ்​.பி. மதன், எஸ்​பிசிஐடி (1) எஸ்​.பி.​யாக​வும், க்யூ பிரிவு சிஐடி எஸ்​.பி. சண்​முகம், எஸ்​பிசிஐடி (2) எஸ்​.பி.​யாக​வும், சென்னை மெட்ரோ மண்டல க்ரைம் பிரிவு சிஐடி ஜி.எஸ்​.​மாதவன், எஸ்​பிசிஐடி (2) எஸ்​.பி.​யாக​வும், மாநில சட்​டம் – ஒழுங்கு உதவி ஐ.ஜி. சிலம்​பரசன், சிறப்பு டிவிஷன் எஸ்​பிசிஐடி பிரிவு எஸ்​.பி.​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த டிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதம், தமிழ்​நாடு கூட்​டுறவு பால் உற்​பத்​தி​யாளர்​கள் இணை​யத்​தின் (ஆவின்) தலைமை ஊழல் தடுப்பு அதி​காரி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அங்​கிருந்த டிஜிபி ராஜீவ்​கு​மார், சென்னை அடுத்த ஊனமாஞ்​சேரி​யில் உள்ள காவல் உயர் பயிற்​சியக டிஜிபி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த ஐ.ஜி. செந்​தில்​வேலன், ஊனமாஞ்​சேரி​யில் உள்ள காவல் உயர் பயிற்​சி​யக கூடு​தல்​ இயக்​குந​ராக பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here