Google search engine
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனதுமகன்கள் மூலம் அரசு நிலத்தை கைப்பற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறப்போர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவுக்கும், நங்கநல்லூர் மெட்ரோவுக்கு இடையேபிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமத்தில் ரூ.411 கோடி மதிப்புள்ள 4.52 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாகஅபகரித்து தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த நிலங்கள்...
 முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஓசூரில் 2,000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக, 3 ஆயிரம் ஏக்கர் காலி இடம் உள்ள சோமனஹள்ளி என்ற பகுதியை தேர்வு செய்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. இரு விமான நிலையங்களுக்கு இடையில் 50 கி.மீ.க்கு மேல் இடைவெளி இருக்க...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் வலியுறுத்தியுள்ளனர். அன்புமணி: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீ.க்கு ரூ.51.25 வீதம் வாடகையாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்...
சென்னை: ஆதிதிராவிடர் ஊராட்சித் தலைவர்களை சந்திக்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அக்.30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சந்திக்க மறுத்தது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி இருந்தார். இதுதொடர்பான செய்தி நாளிதழ்களில் கடந்த திங்கள் கிழமை வெளியாகியிருந்தது....
சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (06209) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.55 மணிக்கு சிறப்பு ரயில் (06210) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.50 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூருவை அடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான...
குரூப்-1 தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை தேர்வர்கள் நவம்பர் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-1 தேர்வில் சில தேர்வர்கள், தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாமல்இருப்பதும், சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் விட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய...
சென்னை: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு திராவிட இயக்க படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த அக்.10-ம் தேதி காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திராவிடர்...
தமிழக பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை (என்.எம்ஆர்) பணி வரன்முறை செய்திடக் கோரி தமிழ்நாடு தொழில்நுட்ப களப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறையில் தினக்கூலி பணியாளர்களாக (என்.எம்.ஆர்)10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றிய பணியாளர்களுக்கு, 10 ஆண்டு பணி முடித்திருந்தால் பணி ஆணை வழங்க வேண்டும் என்று...
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள 169 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோலடி ஏரி, ஆக்கிரமிப்பு காரணமாக 112 ஏக்கராக குறைந்துள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், கோலடி ஏரியை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற முடிவு செய்த வருவாய்த் துறை அதிகாரிகள், முதல் கட்டமாக கடந்த 2 நாட்களில் போலீஸ் பாதுகாப்புடன் அன்பு நகர், செந்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்டு வந்த வீடுகள்...
அதிமுக உடையவில்லை; பதவிஆசை பிடித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயல் வீரர்கள்மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக துணைபொதுச்செயலாளர் முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவின் 53-ம் ஆண்டுதொடக்கவிழாவும், செயல்வீரர்கள்...