Google search engine
பாரபட்​சமின்றி அனைத்து விவ​சா​யிகளுக்​கும் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும் என தமாகா தலை​வர் வாசன் தெரி​வித்​தார். சிவகங்​கை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: பயிர்க்​கடன் தள்​ளு​படி அறி​விப்​பில் தெளி​வான விளக்​கம் இல்​லை. பாரபட்​சமின்றி அனைத்து விவ​சா​யிகளுக்​கும் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மின் கட்டண உயர்வு இல்லை என்​பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மின்​வெட்டு இல்​லாத சூழலை உறுதி செய்​வது அரசின் பொறுப்பாகும். சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை அதி​கரித்து வருகிறது. தமாகா தனது அடித்​தளத்தை...
தமிழ் மொழி மற்​றும் தமிழர்​களின் முன்​னேற்​றத்​துக்கு பாடு​பட்​ட​வர் பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்தி என்​று, சென்​னை​யில் நடை​பெற்ற நினை​வேந்​தல் நிகழ்ச்​சி​யில், விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் கோ.​விசுவ​நாதன் புகழாரம் சூட்​டி​னார். தஞ்சை தமிழ்ப் பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்​தி, சென்​னை​யில் கடந்த மே 13-ம் தேதி கால​மா​னார். இந்​நிலை​யில், தமிழியக்​கம், டாக்​டர் உ.வே.​சா. நூல் நிலை​யம், சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில், அவருக்கு நினை​வேந்​தல் நெகிழ்வு நிகழ்ச்​சி, சென்னை கோட்​டூர்​புரம், தமிழ் இணை​யக்​கல்விக்...
 தூத்துக்குடியில் ரூ.38ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன், எச்டி கேஎஸ்ஓஇ நிறுவன அலுவலர்கள் சந்தித்தனர். தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் எச்டி ஹுண்டாய். இந்நிறுவனம் தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய...
தமிழக சட்​டப்​பேரவை இன்று கூடு​ம் நிலையில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும், ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி’, ‘ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே?’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ என்று தவெக ஆட்சிக்கு வந்ததை விமர்சித்தும், ‘கதறல் கேட்கவில்லையா சிஎம்?’ என்று தமிழகத்தில் நிகழும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி...
தமிழகத்​தின் நிதி​நிலை தொடர்​பான வெள்ளை அறிக்​கை​யை, நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் நேற்று வெளி​யிட்​டார். அதில், அரசின் கடன் ரூ.13 லட்​சம் கோடி​யாக உள்​ளது. ஒவ்​வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்​சம் கடன் சுமை உள்​ளது என்று கூறப்​பட்​டுள்​ளது. கடந்த 5 ஆண்​டு​கள் திமுக ஆட்​சி​யில் இருந்​தது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனிப்​பெரும் கட்​சி​யாக வெற்றி பெற்​று, மற்ற கட்​சிகளின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​தது. முதல்​வ​ராக ஆட்​சிப் பொறுப்​பேற்ற விஜய்,...
திருநெல்​வேலி மாவட்​டம் கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தின் 5-வது அலகில், 320 டன் அணு உலை அழுத்​தகலன் வெற்​றிகர​மாக நிறு​வப்​பட்​டுள்​ளது. கூடங்​குளத்​தில், ரஷ்​யா​வின் பங்​களிப்​புடன் அணுமின் நிலை​யம் செயல்​பட்டு வரு​கிறது. அணுமின் திட்​டத்​தின் 5-வது அலகில், அணு உலை கட்​டிடத்​துக்​குள் ‘அணு உலை அழுத்​தக்கலன்’ (reactor pressure vessel) வெற்​றிகர​மாக நிறு​வப்​பட்​டுள்​ள​தாக, இந்​திய அணுசக்தி கழகம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக, சமூக வலை​தளத்​தில் அக்​கழகம் வெளி​யிட்ட பதி​வு: கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தின் 5-வது...
‘கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி, விமர்சித்துக் கொண்டே இருந்தால் திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்படும்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் தீர்ப்பு. மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும்...
கும்​மிடிப்​பூண்டி அருகே புதுப்​பேட்​டை​யில் பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்​யப்​பட்ட 3 வயது பெண் குழந்​தை​யின் குடும்​பத்​துக்கு அரசு சார்​பில்​, ரூ.8 லட்​சம் நிவாரண நிதிக்​கான ஆணையை நேற்​று செயற்கை நுண்​ணறிவு துறை அமைச்​சர் குமார் வழங்​கி​னார். திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்​டையையொட்​டி​யுள்ள புதுப்​பேட்டை பகு​தி​யில் கடந்த 14-ம் தேதி மாலை, வீட்டு வாசலில் விளை​யாடி கொண்​டிருந்த பிஹார் மாநில தம்​ப​தி​யின் 3 வயது பெண் குழந்தை திடீரென...
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்ஜுனா வழக்​கறிஞர் நோட்டீஸ் அனுப்​பி​யுள்​ளார். அமலாக்​கத் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பை சுட்​டிக்​காட்​டி, ‘ரூ.258 கோடி மதிப்​பிலான போதைப் பொருள் கடத்​தலில் மூளை​யாக செயல்​பட்ட ஜான் பிரிட்​டோ, தவெக அரசின் பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வின் நெருங்​கிய உறவினர் என்ற அதிர்ச்​சி​யூட்​டும் உண்மை அம்​பலா​மாகி​யுள்​ளது’ என திமுக தலை​வர் ஸ்டா​லின், கட்​சி​யின் எக்ஸ் தள பக்​கத்​தில்...
தமிழகத்​தில் 2031-ம் ஆண்டுக்​குள் முதியோர் எண்​ணிக்கை அதி​கரித்​து, பணிபுரிவோரின் எண்​ணிக்கை குறை​யும் என நிதி அமைச்​சர் மரிய வில்​சன் வெளி​யிட்ட வெள்ளை அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. தமிழக நிதி அமைச்​சர் மரிய வில்​சன் வெளி​யிட்ட வெள்ளை அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த வெள்ளை அறிக்கை 2026-27-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால வரவு செலவு திட்ட மதிப்​பீடு​களை ஆய்வு செய்​கிறது. அதன்​படி, மாநிலத்​தின் மொத்த வரி வரு​வாய் ரூ.2,29,579 கோடி​யாக, அதாவது 19 சதவீத வளர்ச்​சி​யுடன் கணிக்​கப்​பட்​டுள்​ளது....