Google search engine
வீர தீரச் செயலுக்​காக இந்​திய அரசின் ‘கீர்த்தி சக்​ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீ​னாட்சி சுந்​தரத்தை தலை​மைச் செயல​கத்​துக்கு அழைத்து முதல்​வர் விஜய் பாராட்​டி​னார். தமிழக அரசு சார்​பில் அவருக்கு ரூ.48 லட்​சத்​துக்​கான காசோலையை வழங்கி கவுர​வித்​தார். தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீ​னாட்சி சுந்​தரம், இந்​திய ராணுவத்​தின் பீரங்கி படைப் பிரி​வில் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2024 டிச.19-ம் தேதி ஜம்மு -...
காலி மது பாட்​டில்​களை திரும்ப பெற, இயந்​திரத்தை பயன்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக, டாஸ்மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். வனப்​பகு​தி​கள் மற்​றும் சுற்​றுலாத் தலங்​களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​வது தொடர்​பான வழக்​கில், காலி மது​பான பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை முறைப்படுத்த சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்​து, டாஸ்​மாக் நிர்​வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீல​கிரி​யிலும், பின்​னர், பல்​வேறு மாவட்​டங்​களி​லும் இந்த திட்​டத்தை அமல்​படுத்​தியது. இதற்​கிடையே, சென்னை உட்பட...
முதல்​வரும் தமிழக வெற்​றிக் கழக தலை​வரு​மான விஜய் - அவரது மனைவி சங்​கீதா இடையி​லான விவாகரத்து வழக்கு செங்​கை குடும்ப நல நீதி​மன்​றத்​தில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. இதில் இருதரப்​பினருக்​கும் முக்​கிய​மான உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​பட்​ட​தால் வழக்கு புதிய திருப்​பத்தை எட்​டி​யுள்​ளது. வழக்​கில் நேரில் ஆஜராவ​திலிருந்து விலக்கு அளித்​து, வீடியோ கான்​பரன்ஸ் மூலம் ஆஜராக அனு​மதி வழங்க வேண்​டும் என விஜய் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்த மனுவை நீதி​மன்​றம் ஏற்​றுக் கொண்டு...
கூடு​தல் விலைக்கு மது விற்​பனை செய்​த​தாக கடந்த 20 நாட்​களில் 200 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக டாஸ்மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். தமிழகத்​தில் டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் மது பாட்​டில்​களுக்கு கூடு​தலாக பணம் வசூலிக்​கப்​படு​வ​தாக பல ஆண்​டு​களாக குற்​றச்​சாட்​டு​கள் இருந்து வரு​கிறது. முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்ற நாள் முதலே பலர் டாஸ்​மாக் கடைகளில் கூடு​தல்​ தொகை வசூலித்​தால் அதை வீடியோ பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டனர். மேலும், டாஸ்​மாக் நிர்​வாக​மும் கூடு​தல் விலைக்கு...
சென்​னை​யில் உள்ள ரெயின்போ குழந்​தைகள் மருத்​து​வ​மனை​களில் பச்சிளம் குழந்​தைகள் மற்​றும் சிறு​வர்​களின் சுவாச பிரச்​சினை​கள், தூக்​கக் குறை​பாடு​களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. செவித்​திறன் இழப்​பு, சுவாச பிரச்​சினை​கள், தூக்​கக் குறை​பாடு போன்ற பாதிப்​பு​கள் குழந்​தைகளின் பேச்​சுத்​திறன், கல்​வி, வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்​கின்​றன. இத்​தகைய சிக்​கல்​களுக்கு ஆரம்​பக்​கட்​டத்​திலேயே முற்​றுப்​புள்ளி வைக்​கும் நோக்​கில், சென்னை கிண்​டி, அண்​ணாநகர் மற்​றும் சோழிங்​கநல்​லூரில் இயங்கி வரும் ரெயின்போ குழந்​தைகள் மருத்​து​வ​மனை​களில், பச்​சிளம் குழந்​தைகள் மற்​றும் சிறு​வர்​களுக்​கான...
தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத் ​தொடர் ஆளுநர் உரை​யுடன் ஜூன் 18-ல் தொடங்க உள்ள நிலை​யில், திமுக எம்​எல்​ஏக்​கள் ஆலோ​னைக் கூட்​டம் கட்​சித் தலை​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மை​யில் 17-ம் தேதி நடை​பெற உள்​ளது. தமிழகத்​தில் தவெக அரசு கடந்த மே 10-ம் தேதி பொறுப்​பேற்​றது. அதைத் தொடர்ந்​து, தவெக அரசு மீது நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்​து​வதற்​காக மே 13 ம் தேதி சட்​டப்​பேரவை கூடியது. வாக்​கெடுப்​பில் தவெக அரசு வெற்றி பெற்​றது. இந்த...
தவெகவினர் தற்​குறிகள் அல்ல கூர்​மை​யான அம்​புக்​குறிகள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரி​வித்​தார். அரசி​யலுக்கு வரு​வது தொடர்​பாக விரை​வில் நல்ல முடிவை அறி​விப்​பேன் என்​றும் அவர் கூறி​னார். சென்னை உத்​தண்​டி​யில் உள்ள தனது இல்​லத்​தில் ரசிகர்மன்ற நிர்​வாகி​களு​டன் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அரசி​யலுக்கு வரலா​மா, வேண்​டாமா என மக்​களிடம் கேட்​டிருந்​தேன். சிறிய​வர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை, ‘நீங்​கள் வராமல் வேறு யார்...
பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: நாடு முழு​வதும் புற்​று​நோய் சிகிச்​சைக்கு கீமோதெரபி மருந்​துகளான சிஸ்​பிளாட்​டின் மற்​றும் கார்​போபிளாட்​டின் ஆகிய​வற்​றிற்கு கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருப்​பது கவலைக்​குரிய ஒன்​றாகும். இந்த தட்​டுப்​பாட்டை சமாளிப்​ப​தற்​காக, மருந்து தயாரிப்பு நிறு​வனங்​களுக்கு விலை உயர்​வுக்கு மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​ யிருப்​பது, மருந்து தட்​டுப்​பாடு என்​பது உண்​மை​யான பிரச்​சினை என்​பதை அரசே ஒப்​புக்​கொண்​டிருப்​பதை காட்​டுகிறது. இந்​தி​யா​வில் ஒவ்​வொரு ஆண்​டும் லட்​சக்​கணக்​கான மக்​கள் புற்​று​நோ​யால் பாதிக்​கப்​படு​கின்​றனர். அவர்​களில்...
சென்னை மாவட்​டத்​தில் உள்ள பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் மாணவர்​கள், அரசு கல்​லூரி விடு​தி​களில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என, மாவட்ட ஆட்​சி​யர் எஸ்​.​மாலதி ஹெலன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு: சென்னை மாவட்​டத்​தில், தமிழக அரசின் சார்​பில் பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் மாணவ, மாண​வியருக்கு 12 அரசு கல்​லூரி மாணவர் விடு​தி​கள், 6 அரசு கல்​லூரி மாண​வியர் விடு​தி​கள் என மொத்​தம் 18...
அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’ என கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள்...