காவலர்கள் பற்றாக்குறை காரணமாக வார விடுமுறை அரசாணை அமல்படுத்தவில்லை: ஐகோர்ட்டில் டிஜிபி தகவல்
admin - 0
தமிழகத்தில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் வார விடுமுறை அரசாணையை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் டிஜிபி தெரிவித்துள்ளார்.
மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காவல் துறையில் பணிச்சுமை அதிகம் உள்ளதால், காவலர்கள் ஓய்வில்லாமல் பணிபுரிய வேண்டியதுள்ளது. போலீஸார் விடுப்பு இல்லாமல் பணிபுரிவதால், மன உளைச்சலுக்கு உள்ளாகி, மக்களிடம் கோபத்தை காட்டும் சூழல் ஏற்படுகிறது.
காவலர் முதல்...
அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருக்கோவிலூரில் பாஜக ஆர்ப்பாட்டம்: வானதி சீனிவாசன் பங்கேற்பு
admin - 0
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அவரது சொந்த தொகுதியான திருக்கோவிலூரில் நேற்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசியதாவது: பெண்கள் இருக்கும்போதே ஆபாசமாகப் பேசுவது திமுகவினரின் பழக்கம். சமுக நீதி, பெண்களுக்கான அரசு என்று கூறிக் கொண்டே பெண்களை இழிவாகப் பேசுவார்கள். நாகரிகமின்றி, வக்கிரமாகப் பேசியுள்ள பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து...
எரியுலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பா? – ஆய்வு செய்ய மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் ஹைதராபாத் பயணம்
admin - 0
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன், 7 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 12 பேர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட பழைய குப்பையை அகழ்ந்தெடுத்து மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு சுற்றுச்சூழல் பூங்கா வரும் என அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள்...
பேருந்துகளில் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் கேமராக்கள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
admin - 0
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையிலான வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது: தமிழகத்தில் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் இதுவரை 675 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். இதற்கான நிதியாக வரும் ஆண்டில் ரூ.3,600 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 4...
கடந்த 2024-25-ம் நிதி ஆண்டில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மி்ன்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த 2023-24ம் நிதி ஆண்டில், தமிழகத்தின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ஒப்பந்த மதிப்பு 9.56 பில்லியன் டாலர்கள் என பதிவாகியுள்ளது. இது கர்நாடகா (4.60 பில்லியன் டாலர்), உத்தர பிரதேசம் (4.46 பில்லியன் டாலர்) ஆகிய மாநிலங்களைவிட 2 மடங்கு அதிகம். இந்நிலையில், இந்த...
வேடசந்தூர் அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த துணை ஆட்சியர் சிவக்குமார் உயிரிழந்தார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய சேராவூரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(46).
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சர்க்கரை ஆலையில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வந்தார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, கொடைக்கானல் கோட்டாட்சியராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் தனது காரில், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி இரவு மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை...
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு புதிதாக 50,000 விவசாய மின் இணைப்புகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
admin - 0
இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: திமுக அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 1.82 லட்சம் விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஏப்.1-ம் தேதியன்று தமிழகத்தின்...
70 வயதடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
admin - 0
எழுபது வயதை எட்டிய அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நேரத்தில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்; எழுபது வயதடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கப்படாத சத்துணவு...
திமுகவின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். திராவிட அறநெறியாளர் தமிழ்வேள் பி.டி.ராஜன் குறித்த `வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நூலை வெளியிட்டு பேசியதாவது:‘வாழ்வே வரலாறு’ என்ற நூலை நீதிக்கட்சியின் வழித்தடத்தில் உருவான திமுக தலைவராக இருந்து வெளியிடுவதை என் வாழ்நாளில் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
1936-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின்...
போப் பிரான்சிஸ்-க்கு பேரவையில் அஞ்சலி: இறுதி நிகழ்வில் அமைச்சர் பங்கேற்க முதல்வர் உத்தரவு
admin - 0
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.
மவுன...










