Google search engine
ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 1009 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக அளவில் தருமபுரியைச் சேர்ந்த சிவசந்திரன் என்ற பட்டதாரி முதலிடத்தை பிடித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3...
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் தலைவர் சாந்தா உருவச்சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகப் புகழ்பெற்ற புற்றுநோயியல் மருத்துவர் சாந்தா கடந்த 1927-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி பிறந்தார். மயிலாப்பூர் - தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, 1949-ம் ஆண்டு தனது மருத்துவப் பட்டப் படிப்பு மற்றும்...
தமிழகத்தில் சூரியசக்தி மின்னுற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியுள்ளது. சூரியசக்தி மின்னுற்பத்திக்கு சூரியனின் வெப்பத்தை விட ஒளியே முக்கியம். அந்த வகையில், தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சூழல் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற மாதங்களில் மழை பெய்யும் நாட்களைத் தவிர்த்து காலை 6.30...
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: மதுவிலக்கு அமலாக்க போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு, குற்ற புலானய்வு பிரிவுடன் இணைக்கப்பட்டு அமலாக்க பணியகம் குற்றப் புலனாய்வு பிரிவு என்ற ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரேதாமாக மதுபானம்...
தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது....
திமுக அமைச்சர்களுக்கு இது போறாத காலம் போலிருக்கிறது. அமலாக்கத்துறை விசாரணை, நீதிமன்றக் கண்டிப்பு என திரும்பிய பக்கமெல்லாம் திமுக அமைச்சர்களுக்கு திகிலாய் இருக்கையில், ’எங்கள் மாவட்டத்துக்குள் வராதே’ என தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக திமுக-வினரே போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திமுக தலைமையால் 2021-ல் அனுப்பிவைக்கப்பட்டார். கருணாநிதி, ஸ்டாலின் இருவருமே, “வேங்கையின் மைந்தன்”...
திமுக தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 2024 மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மேயராக இருந்தபோது தனது வார்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட கல்பனா, மேயர் பதவி ராஜினாமாவுக்குப் பிறகு வார்டு மக்களை கண்டும் காணாது ஒதுங்கிவிட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. கோவை மாநக​ராட்​சி​யின் 100 வார்​டு​களில் 96 வார்​டு​களை திமுக-​வும் அதன்...
‘கூட்டணிக்கு அழைக்கிறார்கள், அதற்கு நன்றி. ஆனால் வெற்றி, தோல்விகளைத் தாண்டி தனித்துதான் போட்டி’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கோவை மாவட்டத்தில் மே.18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம், சென்னை கே.கே.நகரில் நேற்று...
மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து மருத்துவத்துறைகொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சம்பந்தப்பட்ட புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. பணிகள் முடிவடைந்து அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி படித்துவரும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் கூடுதலாக புத்தகங்கள்...
சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞரணியினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கருத்தியல் உரையாடல், ஆக்கப்பூர்வமான விவாதம், அவதூறுகளை முறியடித்தல் என்று அரசியல் செயற்பாடுகள் நிகழும் களமாக சமூக வலைத்தளங்கள் இன்று உருவெடுத்துள்ளன. அதற்கேற்றாற் போல், இளைஞர் அணியினரும் சமூக வலைதளங்களில் களமாடும் வகையில், நம்...