Google search engine
திமுக அமைச்சர்களுக்கு இது போறாத காலம் போலிருக்கிறது. அமலாக்கத்துறை விசாரணை, நீதிமன்றக் கண்டிப்பு என திரும்பிய பக்கமெல்லாம் திமுக அமைச்சர்களுக்கு திகிலாய் இருக்கையில், ’எங்கள் மாவட்டத்துக்குள் வராதே’ என தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக திமுக-வினரே போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திமுக தலைமையால் 2021-ல் அனுப்பிவைக்கப்பட்டார். கருணாநிதி, ஸ்டாலின் இருவருமே, “வேங்கையின் மைந்தன்”...
திமுக தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 2024 மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மேயராக இருந்தபோது தனது வார்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட கல்பனா, மேயர் பதவி ராஜினாமாவுக்குப் பிறகு வார்டு மக்களை கண்டும் காணாது ஒதுங்கிவிட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. கோவை மாநக​ராட்​சி​யின் 100 வார்​டு​களில் 96 வார்​டு​களை திமுக-​வும் அதன்...
‘கூட்டணிக்கு அழைக்கிறார்கள், அதற்கு நன்றி. ஆனால் வெற்றி, தோல்விகளைத் தாண்டி தனித்துதான் போட்டி’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கோவை மாவட்டத்தில் மே.18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம், சென்னை கே.கே.நகரில் நேற்று...
மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து மருத்துவத்துறைகொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சம்பந்தப்பட்ட புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. பணிகள் முடிவடைந்து அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி படித்துவரும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் கூடுதலாக புத்தகங்கள்...
சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞரணியினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கருத்தியல் உரையாடல், ஆக்கப்பூர்வமான விவாதம், அவதூறுகளை முறியடித்தல் என்று அரசியல் செயற்பாடுகள் நிகழும் களமாக சமூக வலைத்தளங்கள் இன்று உருவெடுத்துள்ளன. அதற்கேற்றாற் போல், இளைஞர் அணியினரும் சமூக வலைதளங்களில் களமாடும் வகையில், நம்...
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் திருப்பணி மற்றும் புனரமைப்பு பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நம்பிராஜன், சிவபாலன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையர் மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அதன்பேரில், உயர் நீதிமன்ற மதுரை கிளை சார்பில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் மூத்த வழக்கறிஞர் ஆனந்தவல்லி மற்றும் சென்னை ஐஐடி...
’டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது’ என, பொன்னேரி அருகே ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பத்தில் நேற்று காலை தமிழக அரசின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,...
அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று, அதை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும...
முதல்வரின் குடும்பத்தைச் சார்ந்த தனி நபருக்காக விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: முதல்வர் ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கியதில் இருந்தே, ‘தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை’ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் முதல்வரின் நிழலாக இருக்கும் சபரீசன் பங்குதாரராக வகிக்கும் ‘வானம்...
தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை சந்தித்து வருகின்றனர். காவலர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஏராளமான காவலர்கள் புகார்...