Google search engine
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பணியிலும், வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ‘காவல் துறை​யில் பெண்​கள்’ என்ற தலைப்​பில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து 11-வது தேசிய மாநாடு வண்​டலூர் அருகே ஊனமாஞ்​சேரி​யில் உள்ள தமிழ்​நாடு போலீஸ் அகாட​மி​யில் நேற்று முன்தினம் தொடங்​கியது இரண்டு நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டை...
2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார். தவெக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வக்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் தவெக இஸ்லாமியர்களுக்கு துணைநிற்கும். வக்பு சட்டத்துக்கு எதிராக திமுக கட்சி சார்பிலோ அல்லது தமிழக அரசு...
சந்தானம் நடித்துள்ள திரைப்படத்தின் பாடலுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘சீனிவாசா கோவிந்தா’ எனும் பாடல், திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர்...
 “வரும் 2026 மட்டுமல்ல, 2031, 2036-ம் ஆண்டிலும் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி அமைக்கும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உதகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “உதகை பயணம் சிறப்பாக அமைந்துள்ளது. மக்களை சந்தித்துப் பேச முடிந்தது. அவர்களது கருத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது, சுற்றுலா நிமித்தமாக வந்த மக்களின்...
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியுடன் கடந்த 3-ம் தேதி கோடை விழா தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை...
பட்டாவில் மறைந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் மற்றும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளம்...
நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், டெல்டா மாவட்டங்களில் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களில் அனுமதி...
கடலுக்குள் காற்றாலை மின்னுற்பத்தி செய்வது தொடர்பாக, டென்மார்க் நாட்டு எரிசக்தி முகமை அதிகாரிகளுடன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்னுற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இத்திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. கடலில் அமைக்கப்படவுள்ள காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும்...
கல்வியில் தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்து, கல்லூரி கனவு-2025 எனும் வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து தமிழக...
பாதுகாப்பு கேட்டு நடிகை கவுதமி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நடிகை கவுதமி, தற்போது, அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் தனக்கு சொந்தமான ரூ.9 கோடி மதிப்புள்ள சொத்தை தன்னிடம் பணியாற்றிய அழகப்பன் மோசடி செய்து அபகரித்ததாகவும், சட்ட விரோதமாக அனுமதி பெற்று அங்கு கட்டிடம் கட்டி வருவதாகவும் காவல் துறையில் சமீபத்தில்...