தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது தவறோ, பாவமோ இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்து தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி கூட்டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்பாய், நரசிம்மராவ் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோதும் கூட்டணி ஆட்சி தான் நடந்தது. பல மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி நடந்து...
தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது: உயர்கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு
admin - 0
தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுக்கிறது என்று, சென்னையில் நடைபெற்ற மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டினார். சென்னை, ராணி மேரி கல்லூரியின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற 100 மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கினார்.
மொத்தம் 1,424 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:தமிழகத்தில்...
சென்னையில் ஆக.12-ம் தேதி நடக்கவுள்ள கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கியூபா மீது நடத்தி வரும் தாக்குதல், பொருளாதார தடை ஆகியவற்றை கண்டித்தும், கியூபாவுக்கு ஆதரவு தெரிவித்தும் கியூபா ஆதரவு ஒருமைப்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு...
5 ஆண்டுகள் நன்றாக பணிபுரிந்த கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த ரயில்வே அறிவுறுத்தல்
admin - 0
ஐந்து ஆண்டுகள் நன்றாக பணியாற்றிய கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம் படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத லெவல் கிராசிங்...
நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர்.
நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதன் அருகே அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு,...
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி விமான நிலையத்தை வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தூத்துக்குடிக்கு வரும் பிரதமரை, பாஜகவினர் 25 ஆயிரம் பேர் திரண்டு வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவை நெகட்டிவ் போர்ஸ் என்றும், தமிழகத்தில் பாஜக...
‘ஈரோடு கிழக்கை இழந்தோம்… மொடக்குறிச்சியை மீண்டும் மீட்போம்!’ – ‘உரிமைக்குரல்’ எழுப்பும் காங்கிரஸ்
admin - 0
தமிழகத்தில் தாமரை மலரவே, மலராது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முழங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் 2021-ல் தாமரையை மலரவைத்து தனது செல்வாக்கைக் காட்டியது பாஜக. அப்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பாஜக புதுமுகமான டாக்டர் சரஸ்வதி தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்போது பாஜக-விடம் இருந்து இந்தத் தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ்...
20 தொகுதிக்கு திட்டமிடும் திமுக… 15-க்கு பந்தி போடும் பாஜக! – களைகட்டும் புதுச்சேரி கூட்டணி அரசியல் களேபரங்கள்
admin - 0
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது... கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே நீயா நானா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிடும் புதுச்சேரியின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது தொகுதிகளை தாங்களே தேர்வு செய்து, மக்களுக்கான நல உதவிகளை தாராளமாக வாரி வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களுக்கு தேர்தலில்...
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கெனவே, இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஜூலை 20-ம் தேதி (நேற்று) விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகள் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பெருகிவரும் குப்பையை கூடவா தடுக்க இயலாது? – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் கண்டனம்
admin - 0
தமிழகத்தில் குற்றங்களை தான் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், பெருகி வரும் குப்பையை கூடவா தடுக்க இயலாது என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்: மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவிலான நகரங்களின் தரவரிசையில் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழகத்தின் ஒரு நகரம்...










