Google search engine
‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறு என நிருபணம் ஆகும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்’’ என ஆம் ஆத்மி கட்சியின் புது டெல்லி வேட்பாளர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எல்லாம் தவறு என நிருபணமாகும். 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பின்பு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்....
“மக்களவை தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி திருச்சி சிவா, கம்யூனிஸ்ட்...
மக்களவைத் தேர்தலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்தின் பராசத், மதுராபூர் தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று (ஜூன் 3) காலை தொடங்கி மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில்...
மும்பை ஓட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. மும்பை திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. சிறு வயதில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட்டை பிளாக்கில் விற்று வந்த இவர் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் சிறை சென்றார். சிறை தண்டனைக்குப் பின் இவர் படா ராஜன் தாதா கும்பலில் இணைந்தார். படா...
கனடா நாட்டில் உயர்கல்வி படிக்க போலி அனுமதிச் சீட்டு விநியோகித்து இந்திய மாணவர்களை ஏமாற்றி வந்த இந்திய முகவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டது. ப்ரிஜேஷ் மிஸ்ரா (37) என்பவர் தன்னை குடியேற்றப்பிரிவு முகவர் என கூறிக்கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகம் நடத்தி வந்தார். கனடா நாட்டின் முன்னணி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் கனவோடுஇருக்கக்கூடிய எளிய குடும்பப்பின்னணி கொண்ட மாணவர்கள்தான் இவரது இலக்கு. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுகனடா...
ஒடிசாவில் புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயம் அடைந்தனர். ஒடிசாவின் புரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலில் 42 நாள் சந்தன் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு நரேந்திர புஷ்கரணியில் நடைபெறும் விழாவை காண அதன் கரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இங்கு பக்தர்களில் ஒரு குழுவினர்...
உத்தர பிரதேசம் துங்கர்பூர் பகுதியில் வசித்து வந்த வீட்டு உரிமையாளர் அப்ரார், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார். அலே ஹாசன் மற்றும் ஒப்பந்ததாரர் பர்கத் அலி ஆகிய இருவர் தனது வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கிவிட்டு, வீட்டைக் கொள்ளையடித்ததாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். மேலும் தன்னை கொலை செய்யவும், தனது வீட்டை முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கவும் அவர்கள் முயன்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த...
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக சசி தரூர் உள்ளார். தற்போதைய தேர்தலில் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுகிறார். அவரது தனிச் செயலாளராக சிவகுமார் பிரசாத் (72) என்பவர் பணியாற்றினார். வயது மூப்பு காரணமாக அவர் பணியில் இருந்து விலகிக் கொண்டார். இந்த சூழலில் டெல்லி விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை தங்க கடத்தல் கும்பலை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களில் சிவகுமார் பிரசாத்தும் ஒருவர். அவரிடம்...
இந்திய ராணுவ அதிகாரி மேஜர்ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023-ம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது இன்று வழங்கப்படுகிறது. ஐ.நா. மூலமாக அமைதி காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த மேஜர் ராதிகா சென் மகளிர் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. ஐ.நா. சபை அமைதி காக்கும் சர்வதேச நாளான இன்று (மே 30), மேஜர் ராதிகா...
குழந்தைகளை சட்டவிரோதமாக விற்ற கும்பலைச் சேர்ந்த 8 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். வளர்ப்பு பெற்றோரிடமிருந்து 16 குழந்தைகளை மீட்டுள்ளனர். இதுகுறித்து ஹைதராபாத் ராச்சகொண்டா போலீஸ் ஆணையர் தருண் ஜோஷி நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஃபிர்ஜாதி கூடா பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆர்எம்பி டாக்டர் ஷோபா ராணி, ஒரு பெண் சிசுவை ரூ. 4.5 லட்சத்துக்கு வேறொரு தம்பதியினருக்கு தரகர்மூலம் சட்டவிரோதமாக விற்றுள்ளார். இது தொடர்பான...