வளைகுடா நாட்டிலிருந்து மனைவி திரும்புவதற்கு முன்பு எனது கடன்களை அடைக்க வங்கியில் கொள்ளையடித்தேன் என்று கேரளாவைச் சேர்ந்தவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் போட்டா பகுதியிலுள்ள ஃபெடரல் வங்கிக் கிளையில் 3 தினங்களுக்கு முன்பு கொள்ளைச் சம்பவம் நடந்தது. மர்மநபர் ஒருவர் வங்கிக்குள் புகுந்து கத்திமுனையில் மிரட்டி ஊழியர்களை அறையில் தள்ளி பூட்டி ரூ. 15 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றார். வெறும் இரண்டரை நிமிடங்களில்...
காஷ்மீர் பண்டிட்டுகள் எங்களுடன் சேர்ந்து கண்ணியத்துடன் வாழ வேண்டும்: காஷ்மீர் முஸ்லிம் மதகுரு விருப்பம்
admin - 0
காஷ்மீர் பண்டிட்டுகள் கண்ணியத்துடன் எங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே விருப்பம் என காஷ்மீர் தலைமை முஸ்லிம் மதகுரு மிர்வைஸ் உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு பண்டிட்டுகள் திரும்ப வேண்டும் என்பது அரசியல் பிரச்சினை இல்லை. என்னைப் பொருத்தவரை அது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. இதில் வாக்கு வங்கி அரசியல் கூடாது. நாம்...
காங்கிரஸ் எம்.பி.யின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பா? – விசாரிக்க அசாம் அரசு உத்தரவு
admin - 0
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகோய். காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக செயலாற்றி வருகிறார். இவரது மனைவி எலிசபெத் கால்பர்ன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பு இருப்பதாக பாஜக அண்மையில் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர்...
டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கிய ரயில்வே
admin - 0
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரொக்கமாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் செல்வதற்காக கடந்த 15-ம் தேதி இரவு புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில்களுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு ரயிலில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஏற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10 பெண்கள், 4 சிறுமிகள், 4 ஆண்கள் என மொத்தம் 18...
எல்லையில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் முழு ஆற்றல் இந்திய ராணுவத்துக்கு உள்ளது என ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறினார்.
ஜம்முவில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி ஒன்றை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, எல்லையில் சமீப காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,
இதற்கு மனோஜ் சின்ஹா பதில் அளிக்கையில், “எல்லையில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் முழு ஆற்றலுடன்...
சீனா எதிரி நாடு அல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ள கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனா இடையே பல ஆண்டு காலமாக எல்லைப் பிரச்சினை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாத நிலை இருக்கிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே எல்ஏசி எனப்படும் அசல் எல்லை கட்டுப்பாடு...
கோயில் பராமரிப்பு, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
டெம்பிள் கனெக்ட் நிறுவனம் சார்பில் திருப்பதி ஆஷா அரங்கில் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. 19ம் தேதி வரை 3 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில், 58 நாடுகளில் இருந்து இந்து, பவுத்த, சமண மற்றும்...
திருப்பதிக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று திருமலைக்கு சென்றார்.
அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்னர், அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோன்று, திருச்சானூர் பத்மாவதி தாயாரையும்பட்னாவிஸ் நேற்று தரிசித்தார். அவருக்கு அதிகாரிகள் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கிகவுரவித்தனர். இவருடன் தேவஸ்தான அறங்காவலர் குழு...
அமிர்தசரஸ் வந்த 2-வது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிப்படவில்லை: தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி
admin - 0
அமெரிக்காவில் இருந்த நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் கடந்த சனிக்கிழமை இரவு அமிர்தசரஸ் வந்த இரண்டாவது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிடப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி செய்தன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி அமெரிக்காவில் இருந்து...
கர்நாடகாவில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த அந்த குழந்தையின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன் பலதண்டி நேற்று மண்டியாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மண்டியா அருகேயுள்ள நாகமங்களாவில் மஞ்சுநாத் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அவரது பண்ணையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை...









