இந்த நிதியாண்டில் ராணுவத்துக்கு ரூ.10,200 கோடிக்கு பினாகா வகை ராக்கெட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி கூறியதாவது: உள்நாட்டில் தயாரிக்கப்படும் இரு பினாகா வகை ராக்கெட்கள் ராணுவத்துக்கு ரூ.10,200 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் நடப்பு நிதியாண்டுக்குள் கையெழுத்தாகும். இதில் ஒரு ஒப்பந்தம் ரூ.5,700 கோடிக்கும் மற்றொரு ஒப்பந்தம் ரூ.4.500 கோடிக்கும் கையெழுத்தாகும்.
இந்த கொள்முதல் ராணுவத்தின் 10 பினாகா ரெஜிமென்ட்களுக்கு வலிமை...
அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹைதராபாத் ஆர்கே புரம் கிரீன்ஹில்ஸ் காலனியைச் சேர்ந்த சந்திரமவுளியின் மகன் ரவிதேஜா (28). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2022-ம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றார். மேற்படிப்பு முடிவடைந்த நிலையில், அங்கேயே வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரவிதேஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவிதேஜா இறந்த...
ராணுவ அதிகாரியை திருமணம் செய்வதற்காக 2 ஆண்டுகளாக காதலித்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கிரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக பழகி வந்ததனர்....
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா தீ விபத்தில் 40 குடிசைகள் 6 கூடாரங்கள் சேதமடைந்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் நேற்று முன்தினம் மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்களுடன் சென்ற வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்....
திருப்பதி மலைப்பாதையில் தொடரும் விபத்துகளால் பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல அலிபிரியில் இருந்து ஒரு பாதையும், அங்கிருந்து திருப்பதிக்கு வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1944-ம் ஆண்டு முதல் பாதை அமைக்கப்பட்டது. இது 19 கி.மீ தூரம் கொண்டதாகும். இது திருமலையில் இருந்து திருப்பதிக்கு வர தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது மலைப்பாதை கடந்த 1974-ல் அலிபிரி அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு அமைக்கப்பட்டது. கடல்மட்டத்தில்...
கேரளாவில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேரில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமி ஒருவர் அங்குள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது நடத்தையில் மாற்றம் காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு குழந்தைகள் நல குழுவினர் கவுன்சிலிங் அளித்தனர். அப்போது தனது 13 வயது முதல் தன்னை 62 பேர்...
பெண் மருத்துவர் கொலை குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: வழக்கின் முழு பின்னணி
admin - 0
பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சாகும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி காலை சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த கொடூர...
டெல்லியில் பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் புதிய தலைமையகம் கட்டியுள்ளது. இதனால் அரசு கட்டிடங்களில் உள்ள அக்கட்சிகளின் அலுவலகங்கள் காலி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2012-ல் டெல்லியின் நிலம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புதிய அலுவலகம் கட்ட நிலம் பெற்றன. அப்போது அடுத்த 3 வருடங்களில் அரசு கட்டிடங்களில் செயல்படும் கட்சி...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு துறவிகளுக்காக உள்ள 13 வகை அகாடாக்கள் இங்கு முகாமிட்டு கல்பவாசம் செய்கின்றனர்.
அகாடாக்களில் உள்ள துறவிகளின் செயல்கள் பக்தர்களை கவரும் வகையில் உள்ளன. மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ள துறவிகளில் ஒருவர் பெயர் புறா பாபா. இவரது தலையில்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் விநியோகம் நேற்றுடன் நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்பட்டது. திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் டோக்கன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு திருப்பதியில் டோக்கன் வழங்கும் மையம் ஒன்றில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். 41 பேர்...









