Google search engine
ஆந்திராவில் சிறந்த முறையில் பணியாற்றி, கோப்புகளை சரிபார்த்து உடனுக்குடன் பணிகளை முடிக்கும் சிறந்த அமைச்சர்களின் பட்டியலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே நேற்று வெளியிட்டார். இதில் அவர் 6-ம் இடத்தில் உள்ளார். அமராவதியில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடாது, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்ற வேண்டும் , அரசு ஆசிரியர் பணி இடங்கள்...
காங்கிரஸ் கட்சி அவசரநிலை காலத்​தில் பேச்​சுரிமையை நசுக்​கியது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்​றம்​சாட்டி உள்ளார். நாடாளு​மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த சில தினங்​களாக மாநிலங்​களவை​யில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீது விவாதம் நடைபெற்​றது. இந்த விவாதத்​துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது: குடியரசுத் தலைவரின் உரை நமக்கு உத்வேகம் அளிப்​ப​தாக​வும் பயனுள்ள​தாக​வும் இருந்​தது. அத்துடன் நாம்...
பிஹாரில் சுதந்திர போராட்ட தியாகியின் பிறந்த நாள் விழாவில் அவரது மகனுக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும் ராகுல் காந்தியை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்லால் சவுத்ரி சுதந்திரப் போராட்ட தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தலித் தலைவரான இவர், பெண்கள் உரிமை, தலித் மேம்பாடு உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். தொண்டு நிறுவனம் சார்பில் இவருடைய பிறந்தநாள் விழா நேற்று முன்தினம்...
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், புதால் கிராமத்தில் கடந்த டிசம்பர் 7 முதல் ஜனவரி 19 வரை மர்ம நோய் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று கூறுகையில், “17 பேர் மர்ம மரணம் தொடர்பான விசாரணை...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 8,715 பேர் நாகா துறவிகளாகி விட்டனர். இவர்களில் தலித் மற்றும் பழங்குடிகள் எண்ணிக்கை முதல்முறையாக 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமக் கரையில் மகா கும்பமேளா ஜனவரி 13-ல் தொடங்கியது. நாட்டின் 13 அகாடாக்களின் அனைத்து துறவிகளும் இங்கு கூடியிருந்தனர். இவர்களது முகாமின் பல நிகழ்ச்சிகளில் முக்கியமானது புதிய துறவிகளை தங்கள் அகாடா குழுக்களில் சேர்ப்பது ஆகும். இந்தமுறை, 144 வருடங்களுக்கு...
யுஜிசி வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற திமுக மாணவரணி ஆர்பாட்டத்தில் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் என இண்டியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு ( யுஜிசி) வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின்...
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றநீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்...
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடிக்கடி சுங்கச் சாவடிகளை கடந்து சென்று வரும் உள்ளூர்மக்களின் வசதிக்காக மாத சலுகை கட்டணத்தில் ‘பாஸ்’ பெறும் வசதியும் உள்ளது. இதற்கிடையே,...
அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கு 104 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்க ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்ட அவர்களது கை, கால்களில் விலங்கிடப்பட்டு இருந்தது. இதை கண்டித்து, மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இதுதொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக...