Google search engine
ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம் நெலபர்த்திபாடு பஞ்சாயத்துக்குட்பட்ட கஜபதி நகரில் பில்லி ராஜு என்பவர் பைனானஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி விஜயா, மகன் ராம் சந்தீப் (10) மற்றும் காருண்யா என்ற 7 வயது மகளும் இருந்தனர். ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தீப் 4-ம் வகுப்பும், காருண்யா 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். ராஜு வழக்கம் போல் குழந்தைகளை வென்டூரில் உள்ள தனது வீட்டிலிருந்து...
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை பரசுராமர் மற்றும் நாதுராம் கோட்சேவுடன் ஒப்பிட்டு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்திருப்பது உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யின் மிர்சாபூரில் ராஷ்ட்ரிய ஷோசித் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா நேற்று கூறும்போது, "அவுரங்கசீப் கொடூரமானவர் என்றால், நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே மிகவும் கொடூரமானவர். காந்தியின் படுகொலை பற்றி பாஜக விவாதிக்கவில்லை. முதலில் நாதுராம் கோட்சே பற்றி...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்தி வருகிறது என மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நேற்று பேசிய சோனியா காந்தி இதுகுறித்து மேலும் கூறியதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை படிப்படியாக...
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன் 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். பின்னர் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘ரைசினா டயலாக்’ நிகழ்ச்சியில்...
சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சந்திரயான்-5 திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பெற்றுள்ளோம். இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து நாங்கள் செயல்பட உள்ளோம். இது, சந்திரயான்-5 திட்டத்தின் அறிவியல் திறன்களை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 2023 ஆகஸ்ட் 23-ல் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில்...
காலனித்துவ அடையாளங்களை மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி அசோக் குமார் மிட்டல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்) நடைபெற்ற விவாதத்தின்போது கூறியதாவது: பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின்போது இருந்த இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் மத்திய அரசின் முயற்சி பாராட்டுக்கு உரியது. பிரிட்டிஷாரின் பெருமையை பேசும் இதுபோன்ற பல இடங்களுக்கு பெயர்மாற்றம் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு இன்னும் வேகமாக முன்னெடுக்க...
பிஹார் மாணவி ஒருவர் தனது வீட்டில் நிலவும் பாலின பாகுபாடு குறித்து மனம் உடைந்து பேசும் வீடியோ வைரலாகி, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து மருத்துவராக வேண்டும் என்ற அவரது கனவு உயிர் பெற்றுள்ளது. பிஹாரின் தானாபூரை சேர்ந்த 11-ம் வகுப்பு குஷ்பு குமாரி. இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 399 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இவர் 11-ம் வகுப்பில்...
மொழி என்பது ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிகொள்ள பயன்படுவது மட்டுமே. தாய்மொழியே சிறந்தது. ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி. தேவைப்பட்டால் பல மொழிகளை கற்கலாம். ஆதலால் மொழி அரசியல் தேவையற்றது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்தி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பேசியதாவது: தற்போதைய சூழலில் ஆங்கிலம் கற்றால்தான் நல்ல வேலை கிடைக்கும்...
டிஜிட்டல் சுகாதார திட்டங்களில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் கலங்கரை விளக்கமாக இந்தியா வழிகாட்டுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார். குவாட் கூட்டமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் சார்பில் இந்தோ-பசிபிக் பிராந்திய பெருந்தொற்று தடுப்பு தயார் நிலை குறித்த 3 நாட்கள் கருத்தரங்கை மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் டெல்லியில் நேற்று தொடங்கி...
ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை பல்வேறு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனம், அங்கபிரதட்சனம் உள்ளிட்டவைகளில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்வது தொடர்பான விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆர்ஜித சேவை டிக்கெட்களை குலுக்கல் முறையில் பெற...