பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமம்த்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்
admin - 0
குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் காணாமல் போனால், அதன் உரிமத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நாட்டில் குழந்தை கடத்தல் சம்பவம் அதிகளவில் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரத்தின்படி, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 2000 குழந்தை கடத்தல் வழக்குகள் பதிவாகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் தெலங்கானா,...
காங்கிரஸுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் முஸ்லிம்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பிரதமர் கருத்து
admin - 0
முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் ஹிசார் விமான நிலையத்தில் புதிய முனையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். அம்பேத்கரின் பிறந்த நாளில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் பேசியதாவது:
பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என...
குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மேற்கு வங்க தேர்தல் நடத்த வேண்டும்: சுவேந்து அதிகாரி கோரிக்கை
admin - 0
குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது....
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 15 வெளிநாட்டினரை நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: டெல்லியில் மோகன் கார்டன், உத்தம் நகர் பகுதிகளில் போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் விசா காலத்துக்கு பிறகும் இந்தியாவில் தங்கியிருந்த 15 வெளிநாட்டினர் சிக்கினர்.
இவர்களில் 12 பேர் நைஜீரியாவையும் இருவர் வங்கதேசத்தையும் ஒருவர் ஐவரி கோஸ்ட் நாட்டையும் சேர்ந்தவர்கள்.சரிபார்ப்புக்கு பிறகு இவர்களை நாடு கடத்த வெளிநாட்டினருக்கான பிராந்திய பதிவு...
குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ்...
மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் கைது: ரூ.22 லட்சம் ரொக்கம், துப்பாக்கிகள் பறிமுதல்
admin - 0
தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யுஎன்எல்எப்) அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை மணிப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு இம்பால் மாவட்டத்தின் வெவ்வேறு இடத்திலிருந்து இவர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த யுஎன்எல்எப் தீவிரவாதி ஒருவர் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து...
தெலங்கானா மாநிலத்தில் காரில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு
admin - 0
தெலங்கானாவில் காரில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள், கதவை திறக்க முடியாத காரணத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
தெலங்கானாவின் ஹைதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், தாமரகட்டா பகுதியில் நேற்று ஒரு திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பல ஊர்களில் இருந்தும் உற்றார் உறவினர்கள் கார்களில் வந்திருந்தனர். இவர்களின் கார்கள் திருமண மண்டபத்துக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தன்மய் ஸ்ரீ (5), அபினய் ஸ்ரீ (4) எனும் சகோதரிகள் ஒரு காரில் ஏறி...
ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரோலில் தப்பிச் சென்றார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் சிதி கிராமத்தை சேர்ந்தவர் அனில் குமார் திவாரி (58). ராணுவத்தில் டிரைவராக பணியாற்றி வந்த இவர் கடந்த 1989-ல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவரது உடலுக்கு தீவைத்தார். இதையடுத்து மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினார். எனினும் உண்மை வெளிப்பட்டு, ஆயுள் தண்டனை...
அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மின்னஞ்சல் வந்ததை தொடர்ந்து, அது தொடர்பாக போலீஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த மின்னஞ்சலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆங்கிலத்தில் அனுப்பியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இருப்பினும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை ஊடகங்களுடன் காவல் துறையினர் பகிர்ந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக ராமர் கோயில் அறக்கட்டளை அல்லது பாதுகாப்பு அமைப்புகள் சார்பில்...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சட்டமேதை அம்பேத்கரின் திட்டங்கள், ஆசைகளை நிறைவேற்றத் தயாராக இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கார்கே பேசியதாவது: அம்பேத்கருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் வழங்கி வருகிறது. 1952-ல் அம்பேத்கர், மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பிரதமர்...










