ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தாட்டிசெர்லமாடு எனும் கிராமத்துக்கு அருகில் நேற்று காலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் பாபட்லா மாவட்டம், ஸ்டுவர்டிபுரம் பகுதியை சேர்ந்த 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும், கர்னூல் அருகே உள்ள மகாநந்தி கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு, சொந்த...
உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா நேற்று தனது கடைசி பணி நாளில் 11 தீர்ப்புகளை வழங்கினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா இன்று (மே 24) பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கடந்த புதன்கிழமை பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதேநாளில் மும்பையில் அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காலமானார்.
இதையடுத்து மும்பை சென்ற ஓகா, நேற்று முன்தினம் தனது...
நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டெல்லியில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 3 ஆக உயர்ந்தது. விசாகப்பட்டினம், மத்துலபாளையம் பகுதியில் 28 வயது பெண் ஒருவருக்கும் நந்தியாலா மாவட்டம், சீகலமர்ரி...
ஆந்திர மாநில நிதித்துறை கட்டிடத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் கம்ப்யூட்டர்கள், சில முக்கிய ஆவணங்கள் கருகியதாக தெரியவந்துள்ளது.
அமராவதியின் மங்களகிரி பகுதியில் ஆந்திர மாநில முதன்மை நிதித்துறை அலுவலகமான ‘நிதி பவன்’ உள்ளது. இங்கு நேற்று காலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த 6 அடுக்கு கட்டிடத்தின் 4 மற்றும் 5-வது தளங்களில் சென்ட்ரல் ஏசியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. உடனே மளமளவென தீ...
நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தினருக்கு எதிரான நடவடிக்கையை பல்வேறு மாநிலங்கள் தொடங்கியுள்ளன.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு உள்நாட்டுப் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பி வருகிறது.
வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி நாடு முழுவதும் தங்கியிருக்கும் நிலையில் அவர்களை அடையாளம் காணும் பணியை ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்...
விடுமுறை நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு முன்பு நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ஒருவர் கோடை விடுமுறைக்குப் பிறகு மனுவை பட்டியலிடுமாறு நீதிபதி அமர்விடம் வலியுறுத்தினார்.
இதைக்கேட்டு கோபம் அடைந்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியதாவது: வழக்கறிஞர்கள் கோடை விடுமுறை நாட்களில்...
ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகங்களிலும் கரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், முந்தைய கரோனா அலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 106 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பையில்...
‘‘வக்பு என்பது இஸ்லாமிய கருத்தாக இருந்தாலும், அது இஸ்லாமின் அடிப்படையான பகுதியாகக் கருதப்படுவதில்லை. எனவே, அரசியல்சாசனப்படி அதை அடிப்படை உரிமையாக கோர முடியாது’’ உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று கூறியது.
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தன. இந்த மனு உச்ச...
சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஒரு காலத்தில் கிராமங்களுக்கு செய்திதாள்கள் கூட வருவது கடினம். ரேடியோ மூலமாக மட்டுமே நாம் செய்திகளை அறிய முடிந்தது. யார், யார் சட்டப்பேரவைகளில் நன்றாக பேசினார்களோ அவர்களை தங்கள் அரசியல் தலைவர்களாக மக்கள் ஏற்று கொண்டு...
இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார். இவர், ஜிஎஸ்எஸ் ஆக்ஸலரேட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆவார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: சர்வதேச மாணவர்களின் கனவான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லை. அதுவும் முன்பைப் போல இந்தியா மாணவர்கள் அதுபோன்ற நாடுகளில் மிகவும் எளிதில்...









