Google search engine
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படம் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எம்புரான்’. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித்...
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் எப்படி? - விக்ரமை கொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தேடிக் கொண்டிருப்பதுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ஒரே இரவில் நடக்கும் கதை என்பதை ட்ரெய்லரில் வரும் வசனங்கள், காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், ஜி.வி.பிரகாஷின் வெறியூட்டும் பின்னணி இசை எதிர்பார்ப்பை தூண்டுகின்றன. முழு மாஸ் ஆக்‌ஷன் அவதாரம்...
விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் ரவி அரசு. பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால். அதில் சுந்தர்.சி உடனான பேச்சுவார்த்தை பட்ஜெட் பிரச்சினையால் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகிவிட்டது. விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிப்பவர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே இன்னும் முடிவாகாமல் உள்ளது. விஷாலே தயாரிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. ‘ஈட்டி’...
சூர்யா நடிக்கவுள்ள படத்துக்கு மமிதா பைஜு உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சூர்யா நடிக்கவுள்ள இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மே மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதில்...
சினிமா என்பது கூட்டு முயற்சி. ஒவ்வொரு திரைப்படத்துக்கு பின்னும் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன்கள் மட்டுமல்லாமல், ஏராளமான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பும் இருக்கிறது. லைட்மேனில் இருந்து அரங்க அசிஸ்டென்ட் வரை சினிமாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவர்கள் தான். பெரும் உழைப்பில் உருவாகும் சினிமாவில், அமைப்புசாரா தொழிலாளர்களாக இருப்பதால், சினிமா தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ உள்ளிட்டவை கிடைப்பதில்லை. இதற்காகப் பல வருடங்களாகத் திரைப்பட தொழிலாளர் அமைப்புகள்...
நடிகை த்ரிஷா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’, அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்து 2005-ம் ஆண்டு வெளியான படம் வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது. மகேஷ் பாபு ஜோடியாக த்ரிஷா நடித்து வெளியான தெலுங்கு படம் ‘அத்தடு’. த்ரி விக்ரம் னிவாஸ் இயக்கிய இந்தப் படம் பஞ்ச் வசனங்களுடனும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடனும் கமர்ஷியல் கதையாக வெளி யானது....
மலையாள நடிகையான மமிதா பைஜூ, ‘பிரேமலு’ படம் மூலம் பிரபலமானார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘ரெபல்’ படத்தில் நடித்தார். அடுத்து விஷ்ணு விஷால் ஜோடியாக ‘இரண்டு வானம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். விஜய்-யின் ‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர், தனுஷ் ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ், ‘இட்லிக் கடை’ என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார். ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இப்போது ஆனந்த்...
விஜய் நடித்த ‘பகவதி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. மார்ச் 21-ம் தேதி ஆர்யா நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படம் வெளியாகவுள்ளது. தற்போது அப்படத்துடன் வெளியாகவுள்ளது ‘பகவதி’. 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பகவதி’. லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான படம் ‘பகவதி’. விஜய், ஜெய், ரீமா சென், வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர்...
எம்.ஜி.ஆர் நடிப்பில் பா.நீலகண்டன் இயக்கிய முதல் படம், ‘சக்கரவர்த்தித் திருமகள்’. இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து 17 படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் கடைசிப் படம், ‘நீதிக்குத் தலைவணங்கு’. தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் பாதிப்பில் தெலுங்கு நடிகர் எம்.பாலையா, ‘நேரமு சிக்‌ஷா’ என்ற பெயரில் எழுதிய கதை இது. கே.விஸ்வநாத் இயக்கத்தில், கிருஷ்ணா, பாரதி, எம்.பாலையா என பலர் நடித்த இந்த தெலுங்கு படம் சூப்பர்...
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார். சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் அவர் சின்னத்திரையில் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இவர் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.350 கோடியை வருமானமாகப் பெற்றுள்ளார். இதற்காக அவர் ரூ.120 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடம் அதிக...