Google search engine

புதுக்கடை: பாறை உடைத்தவர்கள் மீது வழக்கு பதிவு

புதுக்கடை போலீஸ் ஆய்வாளர் மாடசாமி தலைமையில், தேங்காப்பட்டணம் பகுதியில் அரசு அனுமதி இன்றி கல்குவாரியிலிருந்து பாறைகளை உடைத்து டெம்போக்கள் மூலம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது, கருங்கற்களை உடைத்து டெம்போக்களில் ஏற்றி கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் மற்றும்...

நாகர்கோவில்: ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும்...

நாகர்கோவில் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு நேற்று (மார்ச் 18) 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம், அறைகள், வாகனங்கள், குற்றவாளி கூண்டு மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பெரும்...

குமரி: கல்லூரி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்

குமரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியின் 10 மாணவிகள் கொண்ட குழுவினர் தக்கலை பேருந்து நிலையத்தில் நேற்று சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா இந்த ஓவியப் பணியைத் தொடங்கி வைத்தார். ஓவியக்...

தக்கலை: போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ் வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களின் நலன் கருதி, கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தர்பூசணி மற்றும் ஜூஸ் நேற்று முதல் வழங்கப்படுகிறது. தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில், பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மேற்பார்வையில், தக்கலை பேருந்து...

மார்த்தாண்டம்: 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி

மார்த்தாண்டம் குறும்பேற்றி அரங்கத்தில் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், மார்த்தாண்டம் சப் டிவிஷன் உட்பட்ட பகுதிகளில் 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என டிஎஸ்பி வலியுறுத்தினார்....

கொல்லங்கோடு: பறக்கும் படையிடம் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி

கொல்லங்கோடு பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நிற்காமல் சென்ற கார் ஒன்றை துரத்திப் பிடித்தனர். காரை சோதனை செய்தபோது, அதன் டிக்கியில் 35 வயது பெண் ஒருவர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதிகாரிகளால் கொல்லங்கோடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையின் விசாரணையில்,...

நாகர்கோவில்: அரசு கல்லூரியில் பொருட்கள் அடித்து உடைப்பு CCTV

நாகர்கோவில் அருகே கோணம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நேற்று, கல்லூரியில் புகுந்த முன்னாள் மாணவர் ஒருவர் அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் இந்தக் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து...

குமரி: கடையை எரித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த குமாரசுவாமி (71) என்பவரின் பெட்டிக்கடைக்கு தீ வைத்ததாக முருகன் மீது பத்மநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது மனுதாரர் குமாரசுவாமி உயிரிழந்தார். அவரது மனைவி வள்ளியம்மாள் சாட்சியமளித்தார். நேற்று, நீதிபதி பரமசிவதாஸ், குற்றவாளி முருகனுக்கு 3 ஆண்டுகள்...

தக்கலை: வாலிபர் தாக்குதல்; போலீஸ் உட்பட 3 பேர் கைது

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பென்சிகர் (39) என்பவரை, சென்னையில் போலீசாக வேலை பார்க்கும் மகேஷ் (41) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து தக்கலை பகுதியில் வழிமறித்து தாக்கியுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாக்கிய...