நாகர்கோவில் அருகே பைக்குகள் மோதி 2 பேர் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். பைக் ரேஸில்...

நாகர்கோவில்: பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: ஒருவர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் லியோன். அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் ( டிசம்பர் 31) நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடியப்பட்டணத்திற்கு கண்டக்டராக பஸ்ஸில் செல்லும் போது, ஜஸ்டின் என்பவர் டிக்கெட் எடுக்காமல் இருந்ததை கேட்ட நிலையில் லியோனை அவர்...

குமரி: விஜய் வசந்த் எம். பி புத்தாண்டு வாழ்துகள்

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிடுப்பதாவது: -ஒவ்வொரு புது வருடமும் நமது வாழ்வில் புது நம்பிக்கையை தருகிறது. கடந்த ஆண்டு நாம் சந்தித்த தடைகள் மற்றும் சோதனைகளை கடந்து புது வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறோம். இந்த...

கலிங்கராஜபுரம்: சமத்துவபுரத்தில்  பூங்கா பணி தீவிரம்

நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியில் 1998 ஆண்டு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. அப்போது சமத்துவபுரம் வளாகத்தில் நீரூற்றுடன் கூடிய குழந்தைகள் பூங்கா மற்றும் தொலைக்காட்சி பெட்டி அன்று இருந்தது. அதன்பிறகு ஆட்சி மாறிய போது பூங்கா பராமரிப்பு இல்லாமல் அனைத்தும் நாசமாகிவிட்டது,  பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த...

தக்கலை: அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

குமரி மாவட்டத்தில் நான்கு சப் டிவிஷன்கள் உள்ளன. இதில் நான்கு மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது ஐந்தாவதாக மீண்டும் மார்த்தாண்டத்தை தலைமையாகக் கொண்டு சப் டிவிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால் மகளிர் போலீஸ் நிலையம் அதிகரிக்கப்படவில்லை.  தக்கலை பகுதிக்கும் மகளிர் காவல் நிலையம் மார்த்தாண்டத்தில் அமைந்துள்ளது. தற்போது பொதுவாக...

நித்திரவிளை: இறைச்சி  கடைகளால் நாய்கள் தொல்லை

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம், நம்பாளி, நடைக்காவு உட்பட சில பகுதிகளில் சாலையோரங்களில் இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியே வீசும் இறைச்சி கழிவுகளை உண்பதற்கு கடைகளின் முன்பு உள்ள சாலையில் ஏராளமான நாய்கள் கூட்டமாக நிற்பது உண்டு.  இறைச்சி கடை இரவு பூட்டிவிட்டு சென்ற...

நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று (டிசம்பர் 30) நடந்தது.  இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய...

நாகர்கோவில் ரயில் நேரம் மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு தினசரி காலை 6.15 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்று வருகிறது. இந்த ரயில் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஜன. 1ம் தேதி காலை 6.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு...

அருமனை: மாலைக்கோட்டில் மரம் நடும் விழா

அருமனை அருகே மாலைகோட்டில் உள்ள நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரம் நேரயுகேந்திரா மற்றும் ஹார்ட் பீட்ஸ் கிளப், பள்ளி மாணவர்கள் சார்பில் 101 மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தக்கலை அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோ பிரகாஷ் கலந்து கொண்டார். கிளப்பின்...

மார்த்தாண்டம்: இன்று இரவு நற்செய்தி கூட்டம்

மார்த்தாண்டம் அருகே உள்ள நெட்டியான் விளையில் கர்த்தர் அதிசயங்களை செய்கிறார் என்ற தேவாலயம் உள்ளது. இந்த ஆலயம் சார்பில் ஆலய வளாகத்தில் வாக்குத்தத்த ஆசீர்வாத கூட்டம் என்ற தலைப்பில் நற்செய்தி கூட்டம் இன்று 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 2 மணி...