மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் கனரக வாகனங்களுக்கு நிரந்தர தடை
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் நேற்று (17-ம் தேதி) விளவங்கோடு தொகுதியில் 24 மணி நேர ஆய்வு பணிகள் ஈடுபட்டார். தொடர்ந்து மார்த்தாண்டம் பஸ் நிலையம், மார்த்தாண்டம் மேம்பாலம் போன்ற பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும் ஊழியர்கள...
இரையுமன்துறை: துறைமுக பகுதியை பார்வையிட்ட கலெக்டர்
குமரி மாவட்டம் இரையுமன்துறை, தேங்காய்பட்டணம் கடற்கரை பகுதிகளில் 3- வது நாளாக இன்றும் (18-ம் தேதி) கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டு ராட்சத அலைகள் வான் உயரத்திற்கு எழும்பி கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்திய நிலையில் உள்ளது. இதில் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின்...
புதுக்கடை: 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகள் வழியாக படகுகளுக்கு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்தபபடுவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று (17-ம் தேதி) மாலை இனயம் அருகேயுள்ள ஹெலன் நகர் பகுதியில் மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ்...
குமரி: அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு கூட்டம் நேற்று (அக்.,16) நடைபெற்றது. அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதை போல 7. 5 % உயர் கல்வி இட ஒதுக்கீட்டை உதவி பெறும் பள்ளிகளுக்கு முழுமையாக விரிவுபடுத்திட...
நாகர்கோவிலில் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் நடை மேம்பாலம் வழியாக செல்வதை தவிர்த்து தண்டவாளத்தில் இறங்கி அடுத்த நடை மேடைக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. இது ஆபத்தானது...
குளச்சல்: கடல் சீற்றத்தால் சிறுவர் பூங்காக்கள் சேதம்
குமரி மாவட்டத்தில் நேற்று (அக்.,16) முதல் தேங்காபட்டணம், குளச்சல், குறும்பனை தொட்டில்பாடு பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சச அலைகள் எழுந்தன. இதில் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய பலரின் விசைப்படகுகள் சேதமடைந்தது.
இதுபோல் தேங்காபட்டணம் அருகே உள்ள ஹெலன் காலனி பகுதியில் உள்ள குருசடி...
படந்தாலுமூடு: நடைப்பெற்ற பாரம்பரிய வர்ம பயிற்சி
குமரி மாவட்டம் படந்தாலுமூட்டில் சிவராமன் ஆசான் நினைவு வர்ம பயிற்சி மையம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் தனித்தனி தலைப்புகளில் வர்ம பயிற்சி நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கான வர்ம பயிற்ச்சியில் வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட மூன்று விதமான நோய்களை அடிப்படையாக...
குமரி மாவட்டம் திரும்பி வந்த நவராத்தி விக்கிரகங்கள்
குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து நவராத்திரி பூஜைக்காக குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன் உதித்த நங்கை அம்மன், குமாரகோவிலில் இருந்து முருகன், பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதி தேவி உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்கள் கொண்டு செல்வது வழக்கம். இவ்வாண்டு நவராத்திரி பூஜைக்கு எழுந்தருளிச் சென்ற...
தேங்காபட்டணம்: மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் கரை ஒதுக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இன்று குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று (அக்.,17) படகுகள் கரையொதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் நேற்று (அக்.,16) அதிகாரிகளின் அறிவுரையை மீறி சிறு படகுகளில் மீன் பிடிக்க...
கிள்ளியூர்: அங்கன்வாடிக்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சி, வட்டக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 113 - வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஆகியோர் கிள்ளியூர் ...













