Google search engine

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கார்மல் பள்ளியில் கிறிஸ்மஸ் பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார். மாணவர்கள் கிறிஸ்து பிறப்பை மாணவ மாணவியர்கள் தத்துவரூபமாக செய்து காண்பித்தனர். கிறிஸ்மஸ் தாத்தா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை...

இரணியல்: நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

இரணியல் அருகே ஆலன்விளை தேவாலயம் அருகே குழித்துறை மறைமாவட்டத்திற்குட்பட்ட தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் பணம் டெபாசிட் செய்திருந்தனர். கடந்த ஆண்டிலிருந்து டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அப்பகுதியினர் இரணியல் போலீசில்...

தலக்குளம்: குளங்களில் மீன் வளர்ப்பு

குமரி மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையின் மூலம் தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலிபெருமாள் குளத்தில் உள்நாட்டு கெண்டை மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணி நேற்று 15ஆம் தேதி நடந்தது. பத்மநாபபுரம் உதவி கலெக்டர் வினய்குமார் மீனா தொடங்கி வைத்தார். தொடர்ந்து தலகுளம் மற்றும் காக்கோட்டு தலை...

மண்டைக்காடு: கோயில் அருகே இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும், கோயிலை தினமும் சுத்தம் செய்து அம்மன் புனிதத்தை காக்க வழி செய்தல் வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில்...

குறும்பனை: புத்தக வாசிப்பு இயக்க தொடக்க விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க குமரிமாவட்ட கமிட்டி சார்பாக புத்தக வாசிப்பு இயக்க தொடக்க விழா குறும்பனை, பாரியக்கல் கடற்கரை பகுதியில் நேற்று (15-ம் தேதி). நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மிடாலக்காடு கிளை தலைவர் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணை...

மணவாளக்குறிச்சி: வீட்டு பீரோவின் அடியில் பதுங்கிய பாம்பு

மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி சியாமளா (55). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் வெளியூரில் உள்ளனர். பாஸ்கரன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், சியாமளா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று (டிசம்பர் 13) சியாமளாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். உறவினருடன் வந்த குழந்தை...

கருங்கல்:  பேருராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் தலைமையிலான அதிகாரிகள் கருமாவிளை பகுதியில் இருந்து கூனாலுமூடு வரை சாலையோர பகுதிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை...

சூசைபுரம்: புனித அல்போன்சா கல்லூரி மாணவர்கள் சாதனை

மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் மணல் ஆலை சார்பில் 2024 ஆம் ஆண்டின் விழிப்புணர்வு வாரத்தை கொண்டாடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகள் மணல் ஆலையில் நடைபெற்றது.  போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கருங்கல்...

குமரி: நாகராஜா கோவிலில் நடைபெற்ற சொக்கப்பனை நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் அமைந்திருக்கும் நாகராஜா திருக்கோவிலில் நேற்று (டிசம்பர் 13) திருகார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு நாகராஜா திடலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

நாகர்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

கார்த்திகை தீபத் திருநாள் குமரி முழுவதும் நேற்று (டிசம்பர் 13) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், குமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் அருகே உள்ள தெரு வீதிகளில் அப்பகுதி மக்கள் தங்கள் இல்லங்கள் முன்பு அகல் விளக்குகளை ஏற்றி திருக்கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடினர். நாகர்கோவிலில்...