கார்த்திகை தீபத் திருநாள் குமரி முழுவதும் நேற்று (டிசம்பர் 13) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், குமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் அருகே உள்ள தெரு வீதிகளில் அப்பகுதி மக்கள் தங்கள் இல்லங்கள் முன்பு அகல் விளக்குகளை ஏற்றி திருக்கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடினர். நாகர்கோவிலில் சிறுவர், சிறுமிகள் பட்டாசுகள் வெடித்தும் கார்த்திகை திருநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.