மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் மணல் ஆலை சார்பில் 2024 ஆம் ஆண்டின் விழிப்புணர்வு வாரத்தை கொண்டாடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகள் மணல் ஆலையில் நடைபெற்றது.
போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் பரிசுகளை வென்றனர்.
போட்டியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் மாணவர் அபிஷேக் சுதிர் முதல் பரிசையும், 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ஜெப்ரின் சிஜோ 2-ம் பரிசும், கட்டுரை எழுதும் போட்டியில் 2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ஆஷ்பிகா மோள் முதல் பரிசையும், 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கிலத்துறை மாணவி டினோலின் பிளாசா 2-ம் பரிசு வென்றார்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் ஆண்டனி ஜோஷ், முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஆரோ உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.