கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் தலைமையிலான அதிகாரிகள் கருமாவிளை பகுதியில் இருந்து கூனாலுமூடு வரை சாலையோர பகுதிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர்.
இதையடுத்து சிலர் அகற்றினர். அதிகாரிகள் அறிவுறுத்தலை புறக்கணித்த நபர்கள் கடைகளை ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் இணைந்து, பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் இருந்த பெயர் பலகைகள், பிளக்ஸ் போர்டுகள் போன்றவற்றை கொட்டும் மழையிலும் நேற்று அகற்றினர். பேரூராட்சி தலைவர் சிவராஜன், செயல் அலுவலர் சத்தியதாஸ், கிள்ளியூர் தாசில்தார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.