குளச்சல்: மீனவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
குளச்சல் அருகே வாணியக்குடி கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரெமிஸ்(48). மீன்பிடித் தொழிலாளி. இவருடைய வீட்டுக்கு செல்லும் பாதை சற்று குறுகலாக அமைந்துள்ளதால், இந்த பாதை தொடர்பாக ரெமிசுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய குருசு மனைவி நிஷா (40) என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த...
மண்டைக்காடு: பகவதி அம்மன் கோவில் விழா நாளை துவக்கம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரளா பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
ஆண்டுதோறும் இக்கோவில் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நாளை 2-ம் தேதி காலை...
இரணியல்: கொத்தனார் மர்ம சாவு; போலீஸ் விசாரணை
இரணியல் அருகே உள்ள பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பச்சையம்மால் (29). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒரு வாரமாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்...
மார்த்தாண்டம்: பஸ் நிலையத்தில் 3 பேரிடம் திருட்டு
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் இலவுவிளை பகுதியைச் சேர்ந்த சுதா (28) என்பவர் 2 வயது குழந்தையுடன் பஸ் நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற ஒரு பெண் குழந்தையின் கையில் கிடந்த தங்க வளையலைத் திருடியுள்ளார். குழந்தை கத்தியதுடன் அந்தப்...
குழித்துறை: பைக் – வேன் மோதியதில் 2 பேர் படுகாயம்
குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜோப்பின் பினு (39). அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் அருமனை மாரப்பாடி பகுதியை சேர்ந்த அனில்குமார் (33) ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் (பிப்.27) இரவு சுமார் 7:00 மணி அளவில் ஜோப்பின் பினு...
மார்த்தாண்டம்: படிக்கட்டில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி
சென்னையை சேர்ந்தவர் தீனதயாளன் (45). இவர் சற்று உடல் வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார். திருமணம் ஆகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சிவகாளிதாசன் என்பவர் வசித்து வந்தார். இதனால் சிவகாளிதாசனும், தீனதயாளனும் நட்பாக பழகி உள்ளனர். தற்போது சிவகாளிதாசன் சென்னையில்...
மண்டைக்காடு கோயில் திருவிழா; கலெக்டர், எஸ்பி நேரில் ஆய்வு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்த தலையில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்,...
பேச்சிப்பறை: மலை கிராமங்களில் இரவில் சூறைக்காற்று
பேச்சிப்பாறை அணைப்பகுதியை சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. நேற்று இரவு திடீரென சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன. இந்த காற்றுக்கு வீடுகளும்...
தக்கலை: 10- ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
தக்கலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 27) காதலன் மாணவியைச் சந்திக்க அவரது வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்.
இதனை அப்பகுதி இளைஞர்கள் கண்டித்து காதலனைத் துரத்தி...
கிள்ளியூர்: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
கிள்ளியூர் அருகே தொலையாவட்டம் பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப் போவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள், காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். மேலும் அரசு மதுபான கடை திறப்பதாக...












