Google search engine

குமரியில்: போலீஸ் நிமிர் குழுவின் விழிப்புணர்வு போஸ்டர்கள்

குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாயின் தலைமையில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் போக்சோ விழிப்புணர்வு போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், இளம் தலைமுறையினர்...

தக்கலை: பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி இரவில் ஆய்வு

தக்கலையில் மறுசீரமைக்கப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டு மற்றும் சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கவும் பேருந்து நிலையத்தைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து அவர் ஆய்வு செய்தார். இந்த...

நட்டாலம்: வங்கி ஊழியருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

நட்டாலம் பகுதியைச் சேர்ந்த வங்கியாளர் சுபாஷ் (37) தனது நிலத்தை பார்வையிடச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுவாமிதாஸ் (57), பிரேமலதா (52), மணிகண்டன் (65), புஷ்பம் (55) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, ரூ. 15,000 மதிப்பிலான இரும்பு வேலியை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்....

குமரியில்: சிறுமிக்கு பாலியல்; மீனவருக்கு 20 ஆண்டு சிறை

குறும்பனைப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (33) என்பவர், 2017 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மாவட்ட போக்சோ நீதிபதி நேற்று 20 வருட சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

நாகர்கோவில்: மின்கம்பத்தில் அரசு பேருந்து மோதி விபத்து

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் நேற்று அரசு பேருந்து ஒன்று மின்கம்பத்தில் மோதியதில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியில் முறையான பேரிகார்டுகள் இல்லாததும், சென்டர்மீடியன் கற்களும் விபத்துக்களுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினந்தோறும் நிகழும் விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மணவாளக்குறிச்சி: பெண் அதிகாரிக்கு அறை – வாலிபர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் உதவி பொறியாளர் ஜீவிதா (28). இவருக்கு திருமணத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (27) என்பவருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக மே 20 அன்று தனது வீட்டு முன்பு கணவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, சஞ்சய் ஜீவிதாவின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இதைத் தடுத்த கணவரையும் தாக்கியுள்ளார்....

பேச்சிப்பாறை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குற்றியாறு பழங்குடியினர் நடமாடும் மருத்துவ அலகினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஆய்வக வசதிகள், பரிசோதனை முடிவுகள் காலதாமதமின்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு மருத்துவக்...

மார்த்தாண்டம்: பைக் திருட்டு ஒருவர் கைது

காப்புக்காட்டைச் சேர்ந்த சேம்தாஸ் (64), மார்த்தாண்டம் சந்திப்பில் உள்ள பேக்கரியில் கேஷ்யராகப் பணிபுரிகிறார். சம்பவத்தன்று பணிக்கு வந்தபோது அவரது பைக் காணாமல் போனது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் காஞ்சிரகோடு தட்டான் விளையைச் சேர்ந்த ஜெபசிங் பைக்...

தெருவுகடை: டாஸ்மாக் கடை மூட முற்றுகைப் போராட்டம்

தெருவுகடை பகுதியில் மெயின் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சர்ச் மற்றும் பள்ளிக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால், கிள்ளியூர் திமுக ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து உடனடியாக...

பொன்மனை: பழங்குடியினருக்கு வீடுகள் -கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்ட தாட்கோ மூலம் பொன்மனை, கடையால் பேரூராட்சிகளில் 100 பழங்குடியினர் பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 73 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இதன் அஸ்திவார பணிகளை மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை...