ராஜகமங்கலம்: குளத்தில் தலை இல்லாத குழந்தையின் சடலம்

ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பகுளத்தில் நேற்று (செப்.11)  மதியம் தலை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் பென்சியா பிரைட் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு...

கொல்லங்கோடு: காரில் 2 ஆயிரம்  லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூத்துறை பகுதியில் இருந்து படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஏற்றிக் கொண்டு சொகுசு கார் ஒன்று கேரளா நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது.  அப்போது சம்பந்தப்பட்ட கார் இரவு சுமார் 11.30 மணி...

குமரி: தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கட்டுமானம், தையல், ஆட்டோ உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள பணப் பயன் மனுக்களை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நாகர்கோவிலில் போக்குவரத்து ஊழியர்கள் 23-வது நாளாக போராட்டம்

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 23 மாத கால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 23-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மேலாளர்...

ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் 2500 பேருக்கு சிகிச்சை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி சுமார் 2500 வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக கல்லூரி முதல்வர் லியோடேவிட் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாக இருப்பதாகவும், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மருத்துவமனைக்கு வரும்...

மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக சுமங்கலி பூஜை நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பெண்கள் அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டியும், எல்லாவித நன்மையும் பெற்று வாழ சிறப்பு பூஜை...

வேர்க்கிளம்பி: பத்திர பதிவு அலுவலகம் முன்பு ஜமாஅத் போராட்டம்

வேர்க்கிளம்பி அருகே ஜமா அத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் 87 சென்ட் நிலம், சார் பதிவாளர் விடுப்பில் இருந்தபோது தனிநபர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து திருவிதாங்கோடு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் நேற்று சார் பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்...

அருமனை:  போலீஸ் மாயம்; 10 நாட்களுக்கு மேல் ஆனதால் மர்மம்

குழித்துறை பகுதியைச் சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (47), கடந்த 30ஆம் தேதி சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அருமனை போலீஸ் குடியிருப்பில் அவரது செல்போனும் பைக்கும் கிடந்தன. இது குறித்து அவரது மனைவி சிமி அருமனை போலீசில் புகார் அளித்துள்ளார்....

புதுக்கடை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குன்னத்தூர், மாத்திவிளையைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கோகுல் குமார் (28) என்பவர், தனது வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுவிளை பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று மாலை 7 மணி அளவில்...

கொல்லங்கோடு: வளர்ச்சி பணிகளை துவக்கிய எம்எல்ஏ

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில், வார்டு 3-ல் சவரிகுளம் சாலை மற்றும் வார்டு 6-ல் சித்திரவிளை-ஆனாடு சானல் கரையில் பக்கச்சுவர் அமைக்கவும், அரசு நடுநிலை பள்ளி லெட்சுமி புதுக்கடையில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு கழிவறை அமைக்கவும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து மொத்தம்...