பேச்சிப்பாறை:   அணை கட்டிய மன்னர் 168-வது பிறந்தநாள் விழா

பேச்சிப்பாறை அணை கட்டிய மன்னர் ராமவர்மா ஸ்ரீமூலம் திருநாளின் 168-வது பிறந்தநாள் விழா மற்றும் அணையை அமைத்த பொறியாளர் கம்ப்ரி அலெக்சாண்டர் மிஞ்சின் 112-வது நினைவு நாள் விழா நேற்று (25-ம் தேதி) பேச்சிப்பாறை அணை அருகில் நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட பாசன சபை தலைவர்...

குழித்துறை:   மெகா தூய்மைப்பணி;  400 பேர் பங்கேற்பு

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட இடவிளாகம் ரயில்வே பாதை அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நேற்று குழித்துறை நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மெகா தூய்மைப் பணியை மேற்கொண்டன. நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி துவக்கி வைத்த இந்த...

கடையால்: மின் அலுவலகத்தில் தர்ணா ;  போலீஸ் பேச்சு வார்த்தை

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட போங்காலை பகுதியை சேர்ந்த தொழிலாளி சுந்தர்ராஜ் (59) வீட்டில் மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தபோது, ரூ.94 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது. 24 நாட்கள் மின் இணைப்பு இல்லாத நிலையில், நேற்று சுந்தர்ராஜ் தனது...

பைங்குளம்: அரசு முழு நேர நூலக வாசகர் வட்ட கூட்டம்

பைங்குளம் அரசு முழு நேர நூலக வாசகர் வட்ட கூட்டம் வாசகர் வட்ட தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நூலகர் துளசி முன்னிலை வகித்தார். இதில் பேராசிரியர் சஜீவ் உள்ளிட்ட வாசகர் வட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், நூலக வார விழாவை சிறப்பாக நடத்துவது, சாகித்ய...

வடசேரியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது.

நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று புத்தேரி புளியடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புளியடி நான்கு வழிச்சாலை அருகே கோணம் அருமநல்லூர் பகுதியை சேர்ந்த விணு (வயது 40), சுபின் (24), அனிஷ் (21) ஆகியோர் பணம் வைத்து சீட்டு...

கோட்டாரில் லாட்டரி விற்ற முதியவர் கைது.

நாகர்கோவில் கோட்டார் பறக்காமடத்தெரு பகுதியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற அழகப்பபுரத்தைச் சேர்ந்த சூசை மாணிக்கம் (81) என்ற கூலித் தொழிலாளியை சோதனையிட்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 12 கேரள லாட்டரி சீட்டுகள்...

நாகர்கோவிலில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், பணிக்கொடையாக...

தேங்காபட்டணம்: சொத்து பிரச்சனையில் தாக்குதல் – வழக்கு பதிவு

தேங்காபட்டணம் பகுதியைச் சேர்ந்த அஜின் (33) என்ற தொழிலாளிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பிரச்சனைக்குரிய பகுதியில் உள்ள பாறையை அஜின் தந்தை அசோகன் (55), சகோதரர்கள் அனி (35), அஜித் (29) ஆகியோர் உடைத்துள்ளனர். இதை அஜின் தட்டிக் கேட்டபோது,...

இரணியல்: டியூஷன் ஆசிரியை தாயார் மீது போக்சோ வழக்கு

இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டியூஷன் ஆசிரியையின் தாய் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மருத்துவமனையில்...

கொல்லங்கோடு: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

மனைவி தன்னை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதால் மனமுடைந்த வெல்டிங் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (46) நேற்று (22-ம் தேதி) தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு...