பாரசீக வளைகுடாவின் வாயிலில் அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணை, உலகப் பொருளாதாரத்தின் ‘இதயத் துடிப்பு’ என்று வர்ணிக்கப்படும் மிக முக்கியமான நீர் வழிப்பாதை. ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கையைத் தீவிரமாக முன்வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போவதாக எச்சரித்துள்ளார். ஆனால், சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் மற்றும் ராணுவச் சவால்களைக் கடந்து ட்ரம்ப்பின் இந்த மிரட்டல் சாத்தியமாகுமா?
போர்ச்...
பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள் மற்றும் அரிய தங்க நாணயங்கள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மொன்டே பகுதியில், மதுபான உற்பத்தி ஆலை கடந்த 1899 முதல் 1970 வரை செயல்பட்டு வந்தது. தற்போது, அந்தப் பழமையான கட்டிடம்...
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப். 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த போர் நிறுத்தம் அடுத்த 60 நாட்கள் அமலில் இருக்கும். அதற்குள் இறுதி அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இருதரப்பு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இந்த சூழலில் 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்றுடன்...
கர்நாடகாவில் பிறந்த தொழில்நுட்பத் தொழில்முனைவோர் சைமன் ஷெட்டி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக குடியேற்றச் சிக்கல்கள், தொழில் ரீதியான பின்னடைவை சந்தித்தார். அத்துடன் தன்னை நாடு கடத்த முயன்றதாகக் கூறப்படும் பொய்யான புகாரை எதிர்கொண்ட நிலையில், அதிலிருந்து விடுதலை பெற்று தற்போது அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
இந்த முக்கியமான நிகழ்வை, ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், கர்நாடகாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து அமெரிக்கக் குடிமகனாக மாறிய தனது பயணத்தைப் பற்றி...
கழுதை வழிப்பாதை போன்ற சட்டவிரோத வழிகள் வழியாக மெக்சிகோவுக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று சீக்கிய இளைஞர் ஒருவர் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘மெக்சிகோவில் இந்திய சீக்கியர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட மோசமான கொடுமை’ என்ற பெயரில் ஒரு வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியானது. மெக்சிகோவில் சிக்கிக் கொண்ட சீக்கிய இளைஞர் ஒருவர் அண்மையில் அந்த வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சட்டவிரோதமாக மெக்சிகோவுக்குள் கழுதை வழிப்பாதை...
1953-ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பின் தென் கொரியா, வட கொரியாவில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருக்கலாம். ஆனால், இன்னும் மோதல் முடியவில்லை.
கடந்த 75 ஆண்டுகளாகத் தணியாத அந்தப் பகை நெருப்பின் புதிய அத்தியாயமாகவே, அமெரிக்கா - தென் கொரியக் கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது.
பொருளாதாரத் தடைகள், உலக நாடுகளின் தனிமைப்படுத்தல், ஐ.நா-வின் தடைகள், கடும் உணவுத் தட்டுப்பாடு... இவை எதுவுமே வட கொரியாவின்...
கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டனாக இருந்த ராபர்ட் ஷகீவ், ரஷ்ய ஆதரவாளராக மாறினார். அவர் ரஷ்ய கடற்படையின் மூத்த தளபதியாக நியமிக்கப்பட்டார்.
செவஸ்டோபோல் நகரில் ராபர்ட் ஷகீவ் (49) குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 13-ம் தேதி அங்குள்ள கடைக்கு அவர் சென்றார். வெளியே வந்தபோது வாசலில் இருந்த குப்பைத் தொட்டி வெடித்துச் சிதறியது. இதில் ராபர்ட் ஷகீவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக சிசிடிவி...
உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்ய நிறுவனத்தின் 7 சரக்கு குடோன்கள் தீக்கிரையாகி உள்ளன. ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் என்ற இ-காமர்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இது அந்த நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் ஆகும். தலைநகர் மாஸ்கோ உட்பட ரஷ்யா முழுவதும் வைல்டுபெரிஸ் நிறுவனத்துக்கு ஏராளமான சரக்கு குடோன்கள் உள்ளன.
மாஸ்கோ அருகே கெலிடினோ பகுதியில் உள்ள குடோன் மீது உக்ரைன் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் குண்டுகளை வீசின....
வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள், இந்திய தேசியக் கொடியை ஏந்தி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய விண்வெளி வீரர் பியோட்ர் டுப்ரோவ் தனது சமூக வலைதள பதிவில், “அன்பு நண்பர்களே, வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தியர்களுக்கு அமைதியும் வளமும்...
உலகின் பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த ஓராண்டில் மட்டும் தினமும் சராசரியாக சுமார் ரூ.8,312 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
‘பெஸ்ட் புரோக்கர்ஸ்’ நிறுவனம் ஃபோர்ப்ஸ் இதழின் பணக்காரர்கள் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது: கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 27 மற்றும் 2026 ஜூலை 27 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 320...









