அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றியது தனது வாழ்நாளின் மிகப்பெரிய கவுரவம் மற்றும் ஒரு அற்புதமான பயணம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளரும்,...
வங்கதேசத்தில் ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அதிபர் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 78 வயதான மூத்த அரசியல்வாதியான ஆலம்கீர், அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பிஎன்பி பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உயர்மட்ட கொள்கை முடிவெடுக்கும் நிலைக் குழுவிலிருந்தும் விலகினார் என்று அக்கட்சியின் மூத்த இணைப் பொதுச்...
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் இணை அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், இதுதொடர்பான விவரங்களை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்துப் பொய் பிரச்சாரம் செய்து நிதி திரட்டியதாகவும் கூறி கடந்த 2024-ம்...
ஈரான் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உணவு ஏற்றிச் செல்லும் லாரியில் ரகசியமாக பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 7, 8 தேதிகளில் துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு சென்றபோது கத்தார் வழங்கிய சொகுசு விமானத்தை அதிபர் ட்ரம்ப் பயன்படுத்தவில்லை.
இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ஈரான் அச்சுறுத்தல் காரணமாக கத்தார் அரச குடும்பம்...
சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்துக்கு அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது.
மேற்கு ஆசிய நாடான சிரியாவின் மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள். கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சிரியாவின் அதிபராக பஷார் அல் ஆசாத் பதவி வகித்தார். ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அவருக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டு...
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா வைரஸ் காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முந்தைய எபோலா பாதிப்புகளைவிட இது மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட அரசு தரவுகளின்படி, இதுவரை 4,381...
குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண பனிப்பாறைகளை கப்பலில் இழுத்து வர விஞ்ஞானிகள் திட்டம்
admin - 0
உலக அளவில் நன்னீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறைகளைக் கடல் வழியே கப்பல்கள் மூலம் இழுத்து வந்து நன்னீராக மாற்றும் விசித்திரமான திட்டத்தை சர்வதேச விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மீண்டும் பரிசீலித்து வருகின்றனர்.
கடந்த 1977-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது அல்-பைசல், அரேபிய தீபகற்பத்தின் கடுமையான குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க இந்த...
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 27 இடங்களை அதன் அடையாள பெயரில் வரைபடத்தில் முறைப்படி பதிவு செய்தது இந்தியா. இதனை கடுமையாக சாடியுள்ளது சீனா. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
எல்லையோர மாநிலமான அருணாச்சலில் உள்ள அந்த 27 இடங்களில் நிலங்ககள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னமும் அடங்கும். இந்தியா - சீனா எல்லையோர பகுதிகளில் உள்ள இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய தொடர்ச்சியாக சீனா...
ஈரானின் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களுக்கு ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரப்படும் என்றும், வருங்காலப் பேச்சுவார்த்தைகளில் இது முக்கிய நிபந்தனையாக சேர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் பிரதிநிதிகள் கோரியதாகத் தெரிவித்த ட்ரம்ப், அதற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத்...
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதால் பதற்றம் தொடர்கிறது.
இருதரப்பு இடையிலான மோதலை தவிர்க்க ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதே வேளையில், சர்வதேசக் கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கு இடையூறு விளைவித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரானுக்கு அவர்...









