அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண்ணை தடுப்புக் காவலில் வைத்த அதிகாரிகள்
admin - 0
இந்திய வம்சாவளிப் பெண் வெங்கட வசம்செட்டி கடந்த 27 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும் இவர் கிரீன் கார்டையும் வைத்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வசித்து வருகின்றனர்.
மேலும் வெங்கட வசம்செட்டிக்கு 2 பேரக்குழந்தைகளும் உள்ளனர். மகள்களுடன் வெங்கட வசம்செட்டி டெக்சாஸில் வசித்து வருகிறார். இவரது மகள் யஷஸ்வினி வசம்செட்டி, குடியேற்றப்பிரிவு வழக்கறிஞராக உள்ளார். மேலும், வெங்கட வசம்செட்டி, 2013-ம்...
“‘முறையான புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடத்தப்படுகிறது?!’ என்று என்னிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் கடைசியாக நடந்த பொதுத் தேர்தலில் 6.46 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். அதில் 1%-க்கும் குறைவானவர்கள் மட்டும்தான் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது அங்கு தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் இருந்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவிலும் வாக்காளர்களுக்கு கட்டாய புகைப்படத்துடன்...
உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 9 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சிறை வளாகத்தில் தனது மனைவி, சகோதரியை சந்தித்தார்.
இம்ரான் கானை அவரது சகோதரி நோரீன் நியாசி ஆதியாலா சிறை வளாகத்தில் உள்ள மாநாட்டு அறையில் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். கடந்த 9 மாதங்களில் இருவரும் சந்தித்தது இதுதான் முதல் முறை. இந்த சந்திப்பின்போது, இம்ரானை மருத்துவமனையில் அனுமதிக்க...
அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஆயுதப்படை குழுவின் தலைமை அதிகாரி அலி அப்துல்லாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை ஈரான் ஆயுதப்படை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில்...
16 வயதில் உலகின் மிக இளைய ‘சாட்டர்ட் அக்கவுண்டன்ட்’ (சிஏ) பட்டம் பெற்று துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கோவிட்-19 லாக்டவுன் காலத்தில் தனது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்த லக் ஷ்மணன் மெய்யப்பனுக்கு, ஏசிசிஏ (சர்வதேச கணக்கியல் தொழில்முறை படிப்பு) தகுதிபெற்ற அவரது தாயார் மூலம் கணக்கியலின் அடிப்படை கருத்துகள் அறிமுகமாகி, நிதித்துறையில் ஆர்வம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, தனது 15-வது வயதில் ஏசிசிஏ படிக்கத் தொடங்கி,...
வளைகுடா நாடுகளில் பல ஆண்டுகளாக ஆழமாகப் பதிந்திருந்த அமெரிக்காவின் அசைக்க முடியாத சுவடுகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கிவிட்டன.
“அமெரிக்காவே எங்களின் பாதுகாப்பு கவசம்” என்று சரணாகதியில் இருந்த வளைகுடா நாடுகள் இன்று அதிபர் ட்ரம்பின் ‘ராஜதந்திர’ நடவடிக்கைகளாலும் முரண்பட்ட பேச்சுகளாலும் பெரும் பொருளாதார மற்றும் உயிரழப்புகளைத் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஒருபுறம் ஈரான் அச்சுறுத்தல், மறுபுறம் ஹார்முஸ் நீரிணைப் பாதை மூடப்பட்டதால் செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதல்...
1953-ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பின் தென் கொரியா, வட கொரியாவில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருக்கலாம். ஆனால், இன்னும் மோதல் முடியவில்லை.
கடந்த 75 ஆண்டுகளாகத் தணியாத அந்தப் பகை நெருப்பின் புதிய அத்தியாயமாகவே, அமெரிக்கா - தென் கொரியக் கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது.
பொருளாதாரத் தடைகள், உலக நாடுகளின் தனிமைப்படுத்தல், ஐ.நா-வின் தடைகள், கடும் உணவுத் தட்டுப்பாடு... இவை எதுவுமே வட கொரியாவின்...
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர், ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்க...
நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நேற்று அந்நாட்டு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் ஹைதர் பஞ்சுதா கூறுகையில், “நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை அடுத்த 48 மணி நேரத்திற்குள்...
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக வீணான சவால்களை விடுப்பதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஈரான் எம்பி இப்ராஹிம் அசிசி அறிவுரை வழங்கி உள்ளார்.
சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போரில் ஈரானை வீழ்த்திய பிறகு உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின்...









