ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (மார்ச் 3) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் இப்போது இல்லாமல் போய்விட்டன. இப்போது அவர்கள் எங்களுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், காலம் கடந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்....
ஈரானில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் செயல்படும் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறி வைத்து அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-2 போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானின் பல்வேறு பகுதிகளில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன. இவை ஏவுகணை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் உளவுத் துறை தகவல்களின்படி ஈரான் தலைநகர் டெஹ்ரான், கெர்மன்...
கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப் படைத் தளம் உள்ளது. அங்கு 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
தோஹா விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்படும் அமெரிக்க போர் விமானங்கள், ஈரான் மீது குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இந்த சூழலில் தோஹா விமானப் படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த அமெரிக்காவின் ஏஎன்/எப்பிஎஸ்-132 என்ற அதிநவீன ரேடாரை ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாக...
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை
admin - 0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உட்பட 165 பேருக்காக வரிசையாகத் தோண்டப்பட்டுள்ள கல்லறைகளின் புகைப்படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
ஈரானின் மினாப் நகரில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தை குறிவைத்து, கடந்த 28-ம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ராணுவ தளம் அருகே உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 165 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ்...
ஈரானில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட ஒரு இளம்பெண் (மோர்டிசியா ஆடம்ஸ்) சித்ரவதைக்கு ஆளாகி, கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
கனடாவில் வசிக்கும் அந்த இளம்பெண், கடந்த ஜனவரியில் ஈரான் தலைவர் காமேனிக்கு எதிராக கனடாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற வீடியோவை நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், ‘‘உன் (காமேனி) கல்லறையின் மேல் நாங்கள் நடனமாடுவோம் என்று நான் சொன்னேன் அல்லவா?’’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
மற்றொரு...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் புறநகர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதை அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, லெபனான் புரட்சி படையான ஹிஸ்புல்லா, ஈரான் உச்ச தலைவர் கமேனி மரணத்தை அடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர்...
ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதால், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அதிகபட்ச அதிகாரம் வைத்திருந்த மதத் தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்குப் பின்னர் இவர்தான் வாரிசு என்று காமேனி பகிரங்கமாக யாரையும் அறிவிக்கவில்லை.
ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா காமேனிதான் அடுத்த தலைவராக வருவார் என்று கூறப்படுகிறது....
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் தலைவர் காமேனி கடந்த 1980 மற்றும் 1981-ம் ஆண்டுகளில் காஷ்மீர் மற்றும் கர்நாடகாவில் பயணம் செய்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவராவதற்கு முன்பே அயத்துல்லா அலிகாமேனி கடந்த 1980-ம் ஆண்டு காஷ்மீர் வந்துள்ளார். அப்போது காஷ்மீரில் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையே பகைமை நிலவி வந்தது. அப்போது காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு வந்த அயத்துல்லா அலி காமேனி, சன்னி மசூதியில் நடைபெற்ற வெள்ளிக்...
‘ரோரிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேலும், ‘எபிக் ஃப்யூரி’ என்ற பெயரில் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் செயலாளர் அலி சம்கானி, ஈரான் ராணுவ கமாண்டர் முகமது பக்போர் ஆகியோர் இறந்தனர்.
இந்த தாக்குதலில் அயத்துல்லா அலி காமேனியின் மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் இறந்தனர். இதேபோல் ஈரானின் இஸ்ஃபாகன் மற்றும் சிராஸ் ஆகிய முக்கிய பகுதிகளிலும்...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது முதலே பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற சில தீவிரவாத தாக்குதல்களுக்கு தலிபான்கள்தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான்...










